கோலாலம்பூர், செப்டம்பர்-18, பரபரப்பான சாலையில் திக்குத் தெரியாமல் ஓடிய நாயை, பொதுமக்கள் பாதுகாப்பாக மீட்கும் வீடியோ வைரலாகி நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மலேசியர்களின் கருணை மற்றும் துணிச்சலை அது புலப்படுத்துவதாக நெட்டிசன்கள் பாராட்டி வருகின்றனர்.
Instagram-மில் @myforeverdoggo என்ற பக்கத்தில் அவ்வீடியோ பதிவேற்றப்பட்டுள்ளது.
காரையும் மோட்டார் சைக்கிளையும் நிறுத்தி விட்டு பலர் நாயைப் பிடிக்க ஓடினர்.
அவ்வாறு ஓடியவர்களில் ஒருவர் சாலையில் விழுவதையும் வீடியோவில் காண முடிந்தது.
ஏற்கனவே பயத்தில் அங்குமிங்கும் ஓடிய அந்நாய், வாகனமோட்டிகள் தன்னைப் பிடிக்க வருவதாக நினைத்து மேலும் கண்டபடி ஓடியது.
முயற்சியைக் கைவிடாத வாகனமோட்டிகள், ஒருவழியாக நாயை சாலையோரமாக கொண்டு வந்தனர்.
அந்த வீடியோ இதுவரை 265,000 views-களையும் 12,000 likes-களையும் பெற்றுள்ளது.
வீடியோ வைரலாகி, 10 நாட்களாக காணாமல் போன நாயைத் தேடி வந்த குடும்பத்தாருடன் அது ஒன்றிணைந்துள்ளது.