Latestமலேசியா

பாம்பு பிடிக்கும் செயல்விளக்கத்தின் போது ராஜநாகம் தீண்டியது: APM அதிகாரி பரிதாப பலி

தெமர்லோ, ஆகஸ்ட்-23 – பஹாங்கில் பாம்பு பிடிக்கும் செயல்விளக்க நிகழ்ச்சியின் போது, ராஜநாகம் தீண்டியதில் மலேசியப் பொது தற்காப்புப் படையான APM-மின் அதிகாரி ஒருவர் பரிதாபமாக உயிரிழந்தார்.

​39 வயதான சார்ஜன் Muhamad Muazam Shah Kamardin என்ற அந்த அதிகாரி, தெமர்லோவில் உள்ள தாமான் தெமர்லோ ஜெயா மண்டபத்தில் நடைபெற்ற தேசிய ஆரோக்கிய நிகழ்ச்சி ஒன்றில் பொதுமக்களுக்குப் பாம்பு பிடிக்கும் செயல்விளக்கம் செய்து காட்டிக் கொண்டிருந்தார்.

​அப்போது, எதிர்பாராத விதமாக ராஜநாகம் அவரது விரல் நகப் பகுதியில் தீண்டியது.

உடனடியாக கைகளைக் கழுவச் சென்ற அவர், திடீரென மயங்கி விழுந்தார்.

​அங்கிருந்தவர்களால் மீட்கப்பட்டு, சிகிச்சைக்காக சுல்தான் ஹஜி அஹ்மாட் ஷா மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்ட போதிலும், சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்ததாக மருத்துவர்கள் உறுதிப்படுத்தினர்.

​உயிரிழந்த அதிகாரியின் மறைவுக்கு APM நிர்வாகமும் பொது மக்களும் தங்களது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துள்ளனர்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!