
பினாங்கு, செப்டம்பர் 9 – பினாங்கு, ஜார்ஜ்டவுனிலுள்ள கோங் மிங் (Kong Ming) 2 சீனப் பள்ளி முன்பு கடந்த ஆகஸ்ட் 29ஆம் தேதி அதிகாலை நடந்த கலவர வழக்கில் 11 ஆண்கள் நீதிமன்றத்தில் குற்றத்தை ஒப்புக்கொள்ளவில்லை.
19 முதல் 34 வயதுக்குட்பட்ட அவர்கள், ஒன்றாகக் கலவரத்தில் ஈடுபட்டதுடன், மற்றவர்களைத் தாக்க பயன்படுத்தக்கூடிய ஆபத்தான பொருட்களை வைத்திருந்ததாக குற்றம் சாட்டப்பட்டுள்ளனர்.
இந்நிலையில் ஒவ்வொருவருக்கும் 6,000 ரிங்கிட் பிணைத் தொகை நிர்ணயிக்கப்பட்டதுடன், தலா ஒருவர் உத்தரவாதம் அளிக்க வேண்டுமென நீதிமன்றம் உத்தரவிட்டது. இந்த வழக்கு அக்டோபர் 19ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.
இந்தச் சம்பவம் தொடர்பாக இதுவரை மொத்தம் 23 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். போலீஸ் விசாரணையில், கடன் தொடர்பான தவறான புரிதலே சண்டைக்கு காரணம் என்றும், இந்தச் சம்பவத்தில் ‘Geng 04’ என்ற குழுவினர் தொடர்புபட்டிருப்பதாகவும் தெரியவந்துள்ளது.



