Latestமலேசியா

புக்கிட் பிந்தாங்கில் சோதனை; குடிநுழைவு அதிகாரியை கத்தியால் மிரட்டிய சுற்றுப்பயணி கைது

கோலாலம்பூர் , ஏப்-30-இன்று அதிகாலை, கோலாலம்பூர், , Bukit Bintang
Changkat-ட்டில் மலேசிய குடிநுழைவுத்துறை நடத்திய சோதனையின் போது, ​​ஒத்துழைக்க மறுத்ததாலும், கெராம்பிட் என்ற கூர்மையான கத்தியினால் மிரட்டிய வெள்ளையரான சுற்றுலாப் பயணி ஒருவர் கைது செய்யப்பட்டார்.

சட்டவிரோத குடியேறிகள் குறித்த புகார்களைத் தொடர்ந்து, கோலாலம்பூர் குடிநுழைவுத்துறையின் 19 அதிகாரிகளும் உறுப்பினர்களும் சுற்றுலாப் பயணிகள் அதிகம் கூடும் இடங்களில் உள்ள இரண்டு பொழுதுபோக்கு மைய வளாகங்களில் சோதனை நடத்தினர்.

இந்த சோதனையின் போது தன்னை ஒரு முன்னாள் ராணுவ வீரர் என்று கூறிக்கொண்ட, 30 வயது மதிக்கத்தக்க மேற்கத்திய நாட்டைச் சேர்ந்த சுற்றுலாப் பயணி,குடிநுழைவு அதிகாரிகளுடன் ஒத்துழைக்க மறுத்தது மட்டுமல்லாமல், ஒரு கூர்மையான ஆயுதத்தையும் காட்டியபோது நிலைமை பதட்டமாகியது.

துப்பாக்கிகளுடன் ஆயுதம் ஏந்தியிருந்தபோதிலும், பணியில் இருந்த அதிகாரிகள் எந்தவிதமான விரும்பத்தகாத சம்பவங்களையும் தவிர்ப்பதற்காக அமைதியாகவும் தொழில் நிபுணத்துவ முறையிலும் நடந்துகொண்டனர்.

அந்த வெளிநாட்டவர் தொடர்ந்து முரட்டத்தனமாக நடந்துகொண்டதுடன், நாட்டை அவமதிப்பது உட்பட, அவ்வப்போது குடிநுழைவு அதிகாரிகளை நோக்கி தகாத வார்த்தைகளையும் பயன்படுத்தினார்.

அதன் பிறகு மோட்டார் சைக்கிள் ரோந்துப் பிரிவைச் சேர்ந்த போலீஸ்காரர்கள் வந்தவுடன் அந்த ஆடவர் தனது ஆயுதத்தை போலீசாரிடம் ஒப்படைக்க முன்வந்தார்.

இரண்டு பொழுதுபோக்கு வளாகங்களில் மேற்கொள்ளப்பட்ட சோதனை நடவடிக்கையில் இந்தோனேசியா, உகண்டா, மியன்மார் , வங்காளதேசம் உட்பட வெளிநாடுகளைச் சேர்ந்த 39 நபர்களிடம் சோதனையிடப்பட்டது.

இந்த நடவடிக்கையின்போது சில சட்டவிரோத குடியேறிகளையும் குடிநுழைவு அதிகாரிகள் கைது செய்தனர்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!