Latestமலேசியா

பெங்களூரு 5 நட்சத்திர ஹோட்டல் நீச்சல் குளத்தில் மின்சாரம் பாய்ந்து வெளிநாட்டுச் சுற்றுலாப் பயணிகள் இருவர் பலி!

பெங்களூரு, நவம்பர்-1-தென்னிந்திய மாநிலமான கர்நாடகாவின் பெங்களூருவில் ஒரு முன்னணி 5 நட்சத்திர ஹோட்டலின் நீச்சல் குளத்தில் மின்கசிவு ஏற்பட்டதில், இரண்டு வெளிநாட்டு சுற்றுப் பயணிகள் பரிதாபமாக உயிரிழந்தனர்.

ஜெர்மனி மற்றும் ஸ்லோவாக்கியா நாடுகளைச் சேர்ந்த ஆடவர்களே உயிரிழந்தவர்கள் என உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

அவர்களை மீட்க முயன்ற அமெரிக்க நாட்டைச் சேர்ந்த ஹோட்டல் விருந்தினர் மற்றும் குளத்தின் காப்பாளர் இருவரும் மின்சாரம் தாக்கி காயமடைந்தனர்; பின்னர் அங்கு மின்சாரம் துண்டிக்கப்பட்டது.

சம்பவத்திற்கான உண்மையான காரணம் குறித்து விசாரணை நடந்து வருவதாக ஹோட்டல் நிர்வாகம் தெரிவித்துள்ளது.

இதனிடையே, பராமரிப்புப் பணிகள் சரியில்லாததே விபத்துக்குக் காரணம் என பாதிக்கப்பட்டோரின் குடும்பத்தினர் புகார் அளித்துள்ளனர்.

இதையடுத்து, தடயவியல் ஆய்வுகள் முடியும் வரை அந்த நீச்சல் குளம் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!