
பெங்களூரு, ஆகஸ்ட்.19- இந்தியாவின் பெங்களூருவில், காதலனுடன் சேர்ந்து தனது கணவரையும் ஐந்து வயது மகனையும் பெண் ஒருவர் கொலை செய்ததாகக் கூறப்படும் அதிர்ச்சிச் சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஹரிணி என்ற அந்தப் பெண், தனது கணவர் அபிநந்தனை காதலன் வினயின் உதவியுடன் கொலை செய்ததாக போலீஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது. பின்னர் அவரது ஐந்து வயது மகனும் கொல்லப்பட்டதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.
கணவரிடமிருந்து பிரிந்து வினயுடன் புதிய வாழ்க்கையைத் தொடங்க ஹரிணி விரும்பியதே கொலைக்குப் பின்னணியாக இருக்கலாம் என ஆரம்பகட்ட விசாரணையில் கூறப்படுகிறது.
சம்பவம் நடந்த வீட்டின் CCTV கேமரா அணைக்கப்பட்டிருந்ததுடன், கைபேசியில் இருந்த சில தகவல்களும் அழிக்கப்பட்டிருந்ததாக போலீசார் கண்டறிந்துள்ளனர்.
இரட்டைக் கொலை தொடர்பாக ஹரிணி மற்றும் வினயை கைது செய்த போலீசார், சம்பவத்தின் முழுப் பின்னணி குறித்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.



