
ஷா ஆலாம், மே-28-பெட்டாலிங் ஜெயாவில் 500 படுக்கைகள் கொண்ட புதிய அரசு மருத்துவமனை கட்டுவதற்கான இடத்திற்கு சுகாதார அமைச்சு அதிகாரப்பூர்வமாக ஒப்புதல் அளித்துள்ளது.
மே 14-ஆம் தேதி நடைபெற்ற கூட்டத்தில் சுகாதார அமைச்சர் டத்தோ ஸ்ரீ Dr சுல்கிஃப்ளி அஹ்மாட் இந்த இடத்தை ஏற்றுக்கொண்டதாக, சிலாங்கூர் மந்திரி பெசார் டத்தோ ஸ்ரீ அமிருடின் ஷாரி கூறினார்.
மருத்துவமனை செங்குத்து வடிவில் கட்டப்படும்; இது குறைந்த நிலப்பரப்பில் அதிக வசதிகளை வழங்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.
தேர்ந்தெடுக்கப்பட்ட இடம் தாமான் மேடான் பகுதியில் உள்ள 6 ஹெக்டர் விளையாட்டு வளாகமாகும்.
இந்த வாரம் சுகாதார அமைச்சு, மாநில மற்றும் மாவட்ட அதிகாரிகள் இணைந்து இடத்தை பார்வையிட உள்ளதாக அமிருடின் சொன்னார்.
தற்போது பெட்டாலிங் ஜெயா மக்கள், கோவாலாலம்பூர், ஷா ஆலாம், சுங்கை பூலோ, செர்டாங் ஆகிய நகரங்களில் உள்ள மருத்துவமனைகளையே நம்பியுள்ளனர்.
புதிய மருத்துவமனை, PJ, சுபாங் ஜெயா, பூச்சோங் மக்களுக்கு நேரடி சிகிச்சை வசதிகளை வழங்கி, மருத்துவமனை நெரிசலை குறைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
2018 முதல் பெட்டாலிங் ஜெயாவுக்கு அரசு மருத்துவமனை தேடப்பட்ட நிலையில், இப்போது இடம் ஒருவழியாக உறுதிச் செய்யப்பட்டிருப்பது, மக்களின் சுகாதார சேவைகளில் முக்கிய முன்னேற்றமாகப் பார்க்கப்படுகிறது.



