Latestஇந்தியாஉலகம்

பெரும்பான்மையை நிருபிக்காததால் விஜய் இன்று முதல்வராகும் நிகழ்ச்சி ரத்து; திமுக-அதிமுக இணைந்து கூட்டணியா?

சென்னை, மே-7-தமிழக வெற்றிக் கழகத்தின் (TVK) தலைவர் விஜய் இன்று முதல்வராகப் பொறுப்பேற்க மாட்டார்.

இந்திய நேரப்படி இன்று காலை 11.30 மணிக்கு நேரு உள் விளையாட்டரங்கில் விஜய் முதல்வராகப் பதவியேற்பதாக முன்னதாகக் கூறப்பட்டது.

ஆனால், விஜய் நேற்று ஆளுநரைச் சந்தித்து ஆட்சியமைக்க உரிமைக் கோரியப் பிறகு நிலைமை மாறியது.

அதாவது தம்மிடம் உள்ள 108 மற்றும் காங்கிரஸ் கட்சியின் 5 சட்டமன்ற உறுப்பினர்களையும் சேர்த்து 113 பேரின் ஆதரவை மட்டுமே அவரால் ஒப்படைக்க முடிந்தது.

எனினும், ஆளுநரோ ஆட்சியமைக்கத் தேவையான 118 பேரது ஆதரவோடு வருமாறு கூறி அனுப்பி வைத்ததால், பதவியேற்பு தள்ளிப் போயிருப்பதாகத் தெரிகிறது.

இதையடுத்து, வேறு சில சிறிய கட்சிகளின் ஆதரவை விஜய் நாடியுள்ளார்.

இந்த பரபரப்புக்கு மத்தியில், தேர்தலில் தோல்வி கண்ட திமுக – அதிமுக இரண்டும் கூட்டணி ஆட்சியமைக்கப் போவதாக மற்றொரு தகவல் தீயாய் பரவி வருகிறது.

அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமியை முதல்வராக்கி, திமுக வெளியிலிருந்து ஆதரளிக்க முடிவுச் செய்துள்ளதாகக் கூறி அரசியல் வட்டாரங்களை அத்தகவல் அதிர்ச்சியடை வைத்துள்ளது.

TVK ஆட்சியமைப்பதை எப்படியாவது தடுத்து நிறுத்தும் நோக்கில், இந்த இருபெரும் எதிரி கட்சிகள் கைகோர்த்து செயல்பட முடிவுச் செய்துள்ளனவாம்.

இவ்வேளையில், கடந்த 3 நாட்களாக விஜய்க்கு வழங்கப்பட்டிருந்த convoy வாகன பாதுகாப்பு திடீரென மீட்டுக் கொள்ளப்பட்டுள்ளது, TVK வட்டாரங்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

மாநில முதல்வருக்கு வழங்கப்படுவதே இந்த சிறப்பு பாதுகாப்பு வளையமாகும்; இந்நிலையில் இது திடீரென விலக்கப்பட்டிருப்பது குறித்து உண்மைக் காரணங்கள் தெரியவரவில்லை.

ஆனால், திமுக-அதிமுக கூட்டணி வாய்ப்பு உள்ளிட்ட பல்வேறு யூகங்கள் கிளம்பியுள்ளன.

முதல்வராகப் பொறுப்பேற்காத வரை அப்பாதுகாப்பு வழங்கப்படாது என்ற அடிப்படையிலே தற்காலிகமாக அது மீட்டுக் கொள்ளப்பட்டுள்ளதாகவும் கூறப்பகிறது.

எனினும், நேற்றைய இந்த நிலவரங்களால் TVK தொண்டர்கள் சற்று ஆடித்தான் போனார்கள் என்றால் அது மிகையில்லை.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!