
பேங்கோக், ஆகஸ்ட்-13-தாய்லாந்து தலைநகர் பேங்கோக்கில் உள்ள சுவர்ணபூமி விமான நிலையத்தில் விமானம் மாறுவதற்காகக் காத்திருந்தபோது, 53 வயது மலேசியர் ஒருவர் மாரடைப்பால் உயிரிழந்தார்.
கெடாவைச் சேர்ந்த அந்த நபர், தனது குடும்பத்தினருடன் கோலாலம்பூரிலிருந்து ஜப்பானின் ஹொக்கைடோ நகருக்குப் பயணம் மேற்கொண்டிருந்தார்.
திங்களன்று பேங்
கோக் விமான நிலையத்தில் காத்திருந்தபோது அவருக்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்டது.
உடனடியாக அவர் அங்குள்ள மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டபோதிலும், இரவு 12 மணிக்கு மேல் அவர் உயிரிழந்ததாக மருத்துவர்கள் உறுதிப்படுத்தினர்.
தாய்லாந்தில் உள்ள மலேசியத் தூதரகத்தின் உதவியுடன் அனைத்து சட்டப்பூர்வ நடைமுறைகளும் முடிக்கப்பட்டு, அவரது உடல் புக்கிட் காயு ஹீத்தாம் நில எல்லை வழியாக மலேசியாவுக்குக் கொண்டுவரப்பட்டது.



