Latestமலேசியா

பொதுச் சேவையில் பெண்களின் பங்கு 60.41 விழுக்காடாக உயர்வு — தியோ நீ சிங்

கோலாலம்பூர்,அக்டோபர் 5 – பொதுச் சேவையில் பெண்களின் பங்கேற்பு 60.41 விழுக்காடாக அதிகரித்துள்ளதாக தொடர்புத் துணை அமைச்சர் தியோ நீ சிங் (Teo Nie Ching) தெரிவித்துள்ளார்.

அதே காலகட்டத்தில், பொதுச் சேவையின் உயர் நிர்வாகக் குழுவில் பெண்களின் பங்கேற்பும் 39.96 விழுக்காடாக அதிகரித்துள்ளது. 2024ஆம் ஆண்டில் இது 39.32 விழுக்காடாக இருந்தது.

பெண்களுக்கு தொடர்ந்து அதிகமான வாய்ப்புகளை வழங்குவதன் மூலம், அரசுப் பணிகளில் அவர்களின் பங்களிப்பை மேலும் அதிகரிக்க முடியும் என்று அமைச்சர் கூறினார். இதற்காக INSPIRHER போன்ற திட்டங்கள் மூலம் பெண் அரசுப் பணியாளர்களுக்கு தலைமைத்துவம் மற்றும் தொழில் முன்னேற்றத்திற்கான வாய்ப்புகள் வழங்கப்படுகின்றன.

தொடர்புத் துறையில் மட்டும் 44 விழுக்காடு பெண்கள் பணியாற்றுகின்றனர். மலேசிய தேசிய செய்தி நிறுவனமான பெர்னாமாவில் 54 விழுக்காடு பெண்கள் பணியாற்றுவதாகவும் அமைச்சர் தெரிவித்தார்.

மேலும், AI@NADI திட்டத்தின் மூலம் 2026ஆம் ஆண்டுக்குள் 25,000 பங்கேற்புகளை இலக்காகக் கொண்டு செயல்பட்டு வருவதாகவும், கடந்த ஆகஸ்ட் 31ஆம் தேதி வரை 20,044 பங்கேற்புகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!