Latestமலேசியா

போர்ட்டிக்சன் AI துறைமுகத் திட்டத்திற்கு நிலம் கையகப்படுத்தப்படாது

போர்ட்டிக்சன், ஜூலை 28 – போர்ட்டிக்சனில் உருவாக்கப்படும் செயற்கை நுண்ணறிவு அதாவது AI அடிப்படையிலான ஸ்மார்ட் துறைமுகத் திட்டத்திற்காக கூடுதல் நிலம் எதுவும் கையகப்படுத்தப்படாது என்று நெகிரி செம்பிலான் மந்திரி பெசார் அமினுடின் ஹருன் (Aminuddin Harun) தெரிவித்துள்ளார்.

566 ஹெக்டேர் நிலம், கிராமங்கள் மற்றும் வனக் காப்பகங்கள் கையகப்படுத்தப்படும் என்ற தகவலை அவர் மறுத்தார். Tanco Holdings நிறுவனம் மற்றும் அதன் துணை நிறுவனமான Midports Holdings-க்கு சொந்தமான 202 ஹெக்டேர் நிலத்திலேயே திட்டம் மேற்கொள்ளப்படும் என்றார்.

3.4 பில்லியன் ரிங்கிட் மதிப்பிலான இத்திட்டம் போர்ட்டிக்சனின் பொருளாதார வளர்ச்சியை ஊக்குவிப்பதுடன், மீனவர்கள் மற்றும் உள்ளூர் மக்களின் வாழ்வாதாரமும் பாதிக்கப்படாது என அவர் உறுதியளித்தார்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!