Latestமலேசியா

போர்ட்டிக்சன் கடற்கரையில் முதலை; பொதுமக்கள் எச்சரிக்கையுடன் இருக்க அறிவுரை

போர்ட்டிக்சன், ஜூலை-7- போர்ட்டிக்சனிலுள்ள பந்தாய் தஞ்சோங் கெமோக் (Pantai Tanjung Gemok) கடற்கரையில் முதலை ஒன்று கரையோரம் வந்த சம்பவம் தொடர்பான காணொளி சமூக ஊடகங்களில் பரவி வருகிறது.

அந்த நேரத்தில் கடற்கரையில் அமர்ந்திருந்த ஒருவர், இருள் காரணமாக முதலை இருப்பதை தாமதமாகவே கவனித்ததாக கூறப்படுகிறது.

பின்னர் அந்த முதலை மீண்டும் கடலுக்குள் சென்றதாக தகவல் வெளியாகியுள்ளது.

எனினும், கடற்கரைக்கு வருபவர்கள் மற்றும் அதிகாலையில் கடலில் நீந்தச் செல்லும் பொதுமக்கள் மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்குமாறும், பாதுகாப்பு அறிவுறுத்தல்களைப் பின்பற்றுமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!