Latestமலேசியா

போலி முதலீட்டுத் திட்டத்தில் RM250,000-ஐ இழந்த ஓய்வுபெற்ற பெண்

கோலாலம்பூர், ஆகஸ்ட் 26 – 65 வயதான பெண்மணியொருவர், தனது பணிக்காலம் முழுவதும் சேமித்த EPF பணத்திலிருந்து 250,000 ரிங்கிட் பணத்தை போலி முதலீட்டுத் திட்டத்தில் இழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

நீண்டகாலமாக அறிந்த முதலீட்டு முகவர் ஒருவர், இந்த முதலீட்டு திட்டத்தை அறிமுகப்படுத்தியதால் நம்பிக்கையுடன் அம்மாது முதலீடு செய்துள்ளார்.

முதல் நான்கு மாதங்களில் 8,000 ரிங்கிட் வருமானம் பெற்ற நிலையில், பின்னர் அந்த வருமானம் நிறுத்தப்பட்டதுடன், முதலீட்டுத் தொகையைத் திருப்பித் தருவதாக நிறுவனம் கூறியும் இதுவரை பணம் கிடைக்கவில்லை என்று அவர் கூறியுள்ளார்.

மோசடி கும்பல்கள் போலி லாபக் கணக்குகள், போலி முதலீட்டு செயலிகள் மற்றும் போலியான முதலீட்டாளர் கருத்துகளைப் பயன்படுத்தி திட்டங்களை உண்மையானவை என நம்ப வைப்பதாக போலீசார் தெரிவித்தனர்.

ஓய்வுபெற்றவர்கள் குறுகிய காலத்தில் அதிக லாபம் தருவதாகக் கூறப்படும் முதலீடுகளில் எச்சரிக்கையாக இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

கடந்த ஆண்டு முதலீட்டு மோசடியில் 9,603 வழக்குகள் பதிவாகி 1.466 பில்லியன் ரிங்கிட் இழப்பு ஏற்பட்டது. 2024ஆம் ஆண்டில் 6,337 வழக்குகளில் 848.63 மில்லியன் ரிங்கிட் இழப்பு பதிவானது. கடந்த ஆறு மாதங்களில் மட்டும் 2,059 பேர் கைது செய்யப்பட்டு, 1,460 பேர் மீது குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட்டது.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!