Latestமலேசியா

மதுபோதையில் ஏற்பட்ட விபத்து: ஒருவர் பலி, மற்றொருவர் காயம்

கோலாலம்பூர், அக்டோபர் 26 – மதுபோதையில் கார் ஓட்டி சாலைப் பராமரிப்புப் பணியாளர் ஒருவரின் மரணத்திற்கும் மற்றொருவர் காயமடையவும் காரணமான விமானப் பணியாளர் குற்றச்சாட்டுகளை மறுத்து விசாரணை கோரியுள்ளார்.

கடந்த அக்டோபர் 24ஆம் தேதி அதிகாலை 4.09 மணியளவில், கோலாலம்பூரிலுள்ள சுல்தான் இஸ்கண்டார் நெடுஞ்சாலையில் (Lebuhraya Sultan Iskandar) இந்த விபத்து நிகழ்ந்தது. இதில் 29 வயது இளைஞர் உயிரிழந்ததுடன், 49 வயதுடைய மற்றொரு நபர் காயமடைந்தார்.

குற்றஞ்சாட்டப்பட்டவரின் ரத்தத்தில் 100 மில்லிலிட்டருக்கு 64 மில்லிகிராம் ஆல்கஹால் இருந்தது. இது அனுமதிக்கப்பட்ட அளவான 50 மில்லிகிராமைவிட அதிகமாகும்.

இரு குற்றச்சாட்டுகளுக்கும் சேர்த்து 35,000 ரிங்கிட் பிணையில் விடுவிக்க நீதிமன்றம் அனுமதித்ததுடன், அவரது ஓட்டுநர் உரிமத்தை இடைநிறுத்தவும், ஒவ்வொரு மாதமும் முதல் தேதியில் காவல் நிலையத்தில் ஆஜராகவும் உத்தரவிட்டது. வழக்கின் அடுத்த விசாரணை நவம்பர் 30ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!