Latestமலேசியா

மலாக்கா தேர்தல்: PH-BN ஒத்துழைப்பு குறித்து அமிருடினுக்கு பொறுப்பு – அன்வார்

செர்டாங், ஆகஸ்ட் 25 – மலாக்கா மாநிலத் தேர்தலில் பக்காத்தான் ஹராப்பான் (PH) மற்றும் பாரிசான் நேஷனல் (BN) இடையிலான சாத்தியமான ஒத்துழைப்பு குறித்து பேச்சுவார்த்தை நடத்தி, விவரங்களை வகுக்க PH தேர்தல் இயக்குநர் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரிக்கு (Datuk Seri Amirudin Shari) பொறுப்பு வழங்கப்பட்டுள்ளதாக PH தலைவர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் தெரிவித்தார்.

அமிருடினுடனான அண்மைய சந்திப்பு மலாக்கா தேர்தல் தொகுதிப் பங்கீடு தொடர்பானது அல்ல என்றும், சிலாங்கூர் மந்திரி பெசாரான அவரை SUKMA தொடர்பாகவே சந்தித்ததாகவும் பிரதமருமான அன்வார் விளக்கினார்.

மலாக்கா தேர்தலில் கட்சிகளுக்கு இடையிலான ஒத்துழைப்புக்கு வாய்ப்பு உள்ளதா எனக் கேட்கப்பட்டபோது, நிர்வாகத்திலும் வாழ்க்கையிலும் ஒத்துழைப்பு முக்கியம் என அன்வார் கூறினார்.

PH தகவல் தொடர்பு இயக்குநரும் தகவல் தொடர்பு அமைச்சருமான டத்தோஸ்ரீ ஃபஹ்மி ஃபட்சில் (Datuk Seri Fahmi Fadzil), அமிருடின் அன்வாரை சந்தித்ததை நேற்று உறுதிப்படுத்தியிருந்தார்.

மலாக்கா தேர்தலில் BN உடனான சாத்தியமான ஒத்துழைப்பு குறித்து PH தேர்தல் குழு ஆராயும் என்றும், அக்குழுவுக்கு அமிருடின் மற்றும் PH பொதுச் செயலாளர் டத்தோஸ்ரீ சைஃபுடின் நசுத்தியோன் இஸ்மாயில் (Datuk Seri Saifuddin Nasution Ismail) தலைமை வகிப்பதாகவும் முன்னதாக தெரிவிக்கப்பட்டிருந்தது

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!