
ஆயர் குரோ, ஆகஸ்ட்-18-மலாக்காவில் 3 ஆண் மாணவர்கள் மீது பாலியல் அத்துமீறல் புரிந்த குற்றத்தை ஒப்புக்கொண்ட 31 வயது தஹ்பிஸ் பள்ளி ஆசிரியருக்கு ஆயர் குரோ செஷன்ஸ் நீதிமன்றம் மொத்தம் 102 ஆண்டுகள் சிறைத் தண்டனையும், 12 பிரம்படிகளும் விதித்து தீர்ப்பளித்துள்ளது.
Muhammad Aimanuddin Julaihi என்பவர் மீது சுமத்தப்பட்ட 10 குற்றச்சாட்டுகளையும் அவர் நீதிபதி முன்னிலையில் ஒப்புக்கொண்டார்.
கடந்தாண்டு மே முதல் ஜூலை மாதங்களுக்கு இடைப்பட்ட காலத்தில், புக்கிட் ரம்பாயில் உள்ள சமயக் கல்வி மைய வளாகத்தில் 13, 14 மற்றும் 16 வயதுடைய மாணவர்களை, இவர் வலுக்கட்டாயமாக ஓரினப் புணர்ச்சிக்கு உட்படுத்தியுள்ளார்.
இதையடுத்து முதல் 8 குற்றச்சாட்டுகளுக்குத் தலா 10 ஆண்டுகள் சிறை மற்றும் ஒரு பிரம்படியும், மற்ற இரண்டு குற்றச்சாட்டுகளுக்குத் தலா 11 ஆண்டுகள் சிறை மற்றும் இரு பிரம்படிகளும் விதிக்கப்பட்டன.
எனினும், இத்தண்டனைகள் அனைத்தையும் ஏக நேரத்தில் அனுபவிக்க நீதிமன்றம் உத்தரவிட்டதால், அவர் அதிகபட்சமாக 11 ஆண்டுகள் மட்டும் சிறைத் தண்டனை அனுபவிப்பார்.



