
மலாக்கா, ஜூன் 16 – மலாக்கா குருபோங் (Krubong) நீர்த் தேக்கக் குளத்தில் ஒரு வாரமாக கண்காணிக்கப்பட்டு வந்த 250 கிலோ எடையும் 3.46 மீட்டர் நீளமும் கொண்ட செம்பு முதலை இறுதியாக அதிகாரிகளின் வலையில் சிக்கியது.
ஜூன் 9 முதல் அமைக்கப்பட்டிருந்த கூண்டில் முதலை சிக்கியதைத் தொடர்ந்து, ஐந்து மணி நேர நடவடிக்கையில் அது பாதுகாப்பாக பிடிக்கப்பட்டு வேறு இடத்துக்கு மாற்றப்பட்டது.
பொதுமக்களின் பாதுகாப்பைக் கருத்தில் கொண்டு பெர்ஹிலித்தான் (PERHILITAN) மற்றும் நீர் ஒழுங்குமுறை வாரியம் (BKSA) இணைந்து இந்த நடவடிக்கையை மேற்கொண்டன.
குருபோங் நீர்த் தேக்கப் பகுதியில் பிடிக்கப்பட்ட முதல் முதலை இதுவாகும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.



