Latestமலேசியா

மலேசிய வழக்கறிஞர் மன்றத்தின் புதிய தலைவராக ஏ,ஜி காளிதாஸ் தேர்வு

கோலாலம்பூர். மார்ச் 13- மலேசிய வழக்கறிஞர் மன்றத்தின் புதிய தலைவராக AG காளிதாஸ் கிருஷ்ணன் தேர்ந்தெடுக்கப்பட்டார். இதற்கு முன் மலேசிய வழக்கறிஞர் மன்றத்தின் செயலாளராக இருந்துள்ள காளிதாஸ் இன்று நடைபெற்ற அந்த மன்றத்தின் ஆண்டுக் கூட்டத்தில் புதிய தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.

மலேசிய வழக்கறிஞர் மன்றத்தின் நடப்பு தலைவராக இருந்து வந்த சலிம் பாஷிர் மற்றொரு தவணைக்கு போட்டியிடவில்லை. மலேசிய வழக்கறிஞர் மன்றத்தின் ஆண்டுக்கூட்டம் கோவிட் பெருந்தொற்றின் காரணமாக முதல் முறையாக இணையம் வாயிலாக நடைபெற்றது.
இதற்கு முன் ஜோகூர் வழக்கறிஞர் மன்றத்தின் தலைவராக இருந்த Sahareen Begum ( ஷஹாரின் பேகம் ) தற்போது மலேசிய வழக்கறிஞர் மன்றத்தின் புதிய செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்டார். கெடா வழக்கறிஞர் மன்றத்தைச் சேர்ந்த முர்ஷிடா முஸ்தபா பொருளாளராக தேர்வு பெற்ற வேளையில் உதவித் தலைவர் பதவிக்கு சுரின்டர் சிங் போட்டியின்றி தேர்வு பெற்றார்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!