Latestஉலகம்

மலேசியாவில் கோலாகலமாக நடைபெற்ற அனைத்துலக அபாகஸ், அறிவியல் மற்றும் ஆங்கில ஒலிம்பியாட் 2026; 900-க்கும் மேற்பட்டோர் பங்கேற்பு

சைபர்ஜெயா, ஜூலை-13-அனைத்துலக அபாகஸ், அறிவியல் மற்றும் ஆங்கில ஒலிம்பியாட் 2026 போட்டிகள் மலேசியாவில் மிக பிரமாண்டமான முறையில் நடைபெற்று முடிந்துள்ளன.

TMP Little Scientist Research Academy பெருமையுடன் நடத்திய இந்த அனைத்துலக பெருவிழாவில், பல்வேறு நாடுகளைச் சேர்ந்த மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் என சுமார் 900-க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.

ஜூலை 3ஆம் தேதி, கலாச்சாரப் பரிமாற்றத் திட்டம் மற்றும் தேசிய அளவிலான போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கான பரிசளிப்பு விழாவுடன் இந்நிகழ்வு கோலாகலமாகத் தொடங்கியது.

அதனைத் தொடர்ந்து, ஜூலை 4ஆம் தேதி சைபர்ஜெயா பல்கலைக்கழகத்தில் மிக விறுவிறுப்பான ஒலிம்பியாட் போட்டிகள் நடைபெற்றன.

இதில் மாணவர்களின் அறிவுத்திறனும் கணிதத் திறமையும் சோதிக்கப்பட்டன.

இவ்விழாவின் முத்தாய்ப்பாக, ஜூலை 5ஆம் தேதி UTM KL பல்கலைக்கழகத்தில் அனைத்துலக விருது வழங்கும் விழா மிக பிரமாண்டமாக நடைபெற்றது.

இந்த உலகளாவிய தளம் மாணவர்களின் கல்வித் திறனை மேம்படுத்துவதோடு மட்டுமல்லாமல், அனைத்துலக நாடுகளுக்கு இடையேயான கலாச்சார உறவை வலுப்படுத்தவும் ஒரு சிறந்த பாலமாக அமைந்தது என ஏற்பாட்டாளர்கள் தெரிவித்தனர்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!