Latestமலேசியா

மலேசியாவுக்கான இந்தியாவின் புதிய உயர் ஆணையராக பொறுப்பேற்றார் சோம்நாத் கோஷ்; இருதரப்பு உறவுகளை மேலும் வலுப்படுத்த முனைப்பு

கோலாலம்பூர், செப்டம்பர்-5,மலேசியாவுக்கான இந்தியாவின் புதிய உயர் ஆணையராக சோம்நாத் கோஷ் (Somnath Ghosh) முறைப்படி பொறுப்பேற்றுக் கொண்டுள்ளார்.

முன்னதாக மலேசியா வந்தடைந்தபோது துணை உயர் ஆணையர் மற்றும் வெளியுறவு அமைச்சின் பிரதிநிதிகள் அவரை எதிர்கொண்டு வரவேற்றனர்.

​ஏற்கனவே அமெரிக்காவின் சிக்காகோ நகரில் இந்தியத் தூதராகப் பணியாற்றிய அனுபவம் கொண்ட இவர், இங்கு 5 ஆண்டுகள் சேவையாற்றி திரும்பியுள்ள முன்னாள் உயர் ஆணையர் பி.என். ரெட்டியின் இடத்தைப் பூர்த்திச் செய்கிறார்.

​மலேசியா மற்றும் இந்தியா இடையிலான இருதரப்பு வர்த்தகம், பாதுகாப்பு மற்றும் தூதரக உறவுகளை மேலும் வலுப்படுத்த சோம்நாத் துணைப் புரிவார் என கோலாலம்பூரில் உள்ள இந்தியத் தூதரகம் நம்பிக்கைத் தெரிவித்துள்ளது.

அதேசமயத்தில் அவர் நேற்று மலேசியாவில் உள்ள இந்திய வம்சாளி அமைப்புகளின் பிரதிநிதிகளை அறிமுக நிகழ்ச்சி ஒன்றில் சந்தித்துப் பேசினார்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!