
மீரி, செப்- 25,
அண்மையில் வைரலான ஒரு வீடியோ பதிவில் கொடுமைப்படுத்துதல் போன்ற தீவிரமான பகடி வதைக்கு உள்ளான மீரி தேசிய இளைஞர் தொழில் திறன் பயிற்சிக் கழகத்தின் மாணவர், சட்ட நடவடிக்கை எடுக்க விரும்பவில்லை என முடிவு செய்துள்ளார். இந்த சம்பவம் தொடர்பில் சரவா போலீஸ் விசாரணயை தொடங்கியுள்ள போதிலும் பாதிக்கப்பட்ட மாணவரின் தந்தையும் சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டாம் என்ற நிலைப்பாட்டை வெளிப்படுத்தியுள்ளார் என சரவா போலீஸ் ஆணையர் டத்தோ
மன்சா அட்டா ( Mancha Atta ) தெரிவித்தார்.
இந்த விவகாரம் தொடர்பில் பாதிக்கப்பட்ட மாணவர் முன்வந்து புகார் செய்ததால் அவரது பெற்றோர் மற்றும் நண்பர்கள் ஆகியோரையும் விசாரணைக்கு போலீஸ் அழைத்துள்ளது.
இதில் குற்ற அம்சங்கள் இருக்குமானால் அல்லது அதிகாரப்பூர்வமாக புகார் தெரிவிக்கப்பட்டிருந்தால் விசாரணை நடத்தப்படும் என நேற்று போலீஸ் படைத் தலைவர் டத்தோஸ்ரீ முகமட் காலிட் இஸ்மாயில் கூறியிருந்தார். 13 வினாடிகள் கொண்ட வீடியோ கிளிப்பில், ஆண் பயிற்சியாளர்கள் தங்கள் நண்பரின் கால்களை கட்டியி பின், அவரை தூக்கி ஒரு கம்பத்தில் மோதும் காட்சியை காணமுடிகிறது.
இது கொடுமைப்படுத்துவதாக இருக்கலாம் என்ற பொதுமக்களின் கவலையைத் தூண்டியது.பாதிக்கப்பட்ட மாணவர் மருத்துவ பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பப்பட்ட போதிலும் அந்த மாணவருக்கு உடல் ரீதியாக எந்த காயங்களும் இல்லை என்று முடிவுகளில் கண்டறியப்பட்டதாக Mancha கூறினார்.