Latestமலேசியா

மூன்றாம் படிவ மாணவிக்குப் பாலியல் தொந்தரவு; பேராக் ஆரம்பப் பள்ளித் தலைமையாசிரியர் குறித்து விசாரிக்க உத்தரவு – கல்வி அமைச்சர்

கோலாலம்பூர், அக்டோபர்-25 – பேராக்கில் பள்ளி மாணவி ஒருவருக்குப் பாலியல் தொந்தரவு அளித்ததாக ஆரம்பப் பள்ளித் தலைமையாசிரியர் மீது எழுந்துள்ள புகார் குறித்து முழுமையான விசாரணை நடத்த மாநிலக் கல்வி இலாகாவுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

​கல்வி அமைச்சர் டத்தோ ஸ்ரீ ஃபாட்லீனா சிடேக் இதனை உறுதிப்படுத்தினார்.

மூன்றாம் படிவ மாணவிக்குத் தகாத முறையில் குறுஞ்செய்திகள் அனுப்பப்பட்டதாகக் கூறப்படும் இந்தக் குற்றச்சாட்டு குறித்து தீவிர விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

விசாரணை முடியும் வரை சம்பந்தப்பட்ட தலைமையாசிரியர், பாகான் டத்தோ மாவட்டக் கல்வி அலுவலகத்தில் தற்காலிகமாகப் பணியமர்த்தப்பட்டுள்ளார்.

​மாணவர்களின் பாதுகாப்பு மற்றும் நலனுக்கே எப்போதும் முன்னுரிமை அளிக்கப்படும் என்றும், இத்தகைய குற்றச்சாட்டுகள் மிகக் கடுமையாகவும் தீவிரமாகவும் கையாளப்படும் என்றும் ஃபாட்லீனா வலியுறுத்தியுனார்.

சம்பந்தப்பட்ட தலைமையாசிரியரிடம், பாதிக்கப்பட்ட மாணவியின் உறவினர் என நம்பப்படும் 2 பெண்கள் விளக்கம் கோரும் வீடியோ முன்னதாக வைரலானது குறிப்பிடத்தக்கது.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!