Latestஉலகம்

ரஷ்ய அதிபர் புட்டினுக்கு ‘திருக்குறள்’ ரஷ்ய மொழிபெயர்ப்புப் பிரதியை பரிசளித்தார் பிரதமர் மோடி

இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி, ரஷ்ய அதிபர் விளாடிமிர் புட்டினுக்குப் புகழ்பெற்ற தமிழ் இலக்கியமான ‘திருக்குறள்’ நூலின் ரஷ்ய மொழிபெயர்ப்புப் பிரதியை பரிசாக வழங்கியுள்ளார்.

BRICKS மாநாட்டில் பங்கேற்பதற்காக புட்டின் இந்தியா வந்துள்ள நிலையில், ​புது டெல்லியில் நடைபெற்ற இருதரப்புச் சந்திப்பின் போது இப்பரிசு வழங்கப்பட்டது.

மத்திய செம்மொழித் தமிழாய்வு நிறுவனத்தால் 2026-ல் வெளியிடப்பட்ட இந்நூலை Naira Mkrtchyan என்பவர் ரஷ்ய மொழியில் மொழிப் பெயர்த்துள்ளார்.

பின்னர் X தளத்தில் இது குறித்து பதிவேற்றிய பிரதமர் மோடி, திருக்குறள் தேச எல்லைகள், மொழிகளைக் கடந்த திருவள்ளுவரின் அளப்பரிய ஞானத்தைப் பறைச்சாற்றுவதாக புகழாரம் சூட்டினார்.

​திருவள்ளுவர் இயற்றிய திருக்குறள், அறம், பொருள், இன்பம் ஆகிய முப்பால்களைக் கொண்டு 1,330 குறட்பாக்களால் ஆன உலகப் புகழ்பெற்ற வாழ்வியல் வழிகாட்டி நூலாகும்.

ரஷ்ய இலக்கிய மேதை லியோ டால்ஸ்டாய் போன்ற உலகச் சிந்தனையாளர்களிடம் திருக்குறள் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!