
லண்டன், செப்டம்பர் 11 – தமிழக முதலமைச்சர் விஜய் முதலீடுகளை ஈர்க்கும் நோக்கில் லண்டன் சென்றுள்ள நிலையில், நடிகர் அஜித்தை சந்திப்பாரா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
லண்டன் சில்வர்ஸ்டோன் சர்க்யூட்டில் (Silverstone Circuit) செப்டம்பர் 11 மற்றும் 12ஆம் தேதிகளில் நடைபெறும் ‘Michelin Le Mans Cup’ கார் பந்தயத்தில் நடிகர் அஜித் குமார் பங்கேற்கிறார். முதலமைச்சர் விஜயின் லண்டன் பயணமும் இதே காலகட்டத்தில் அமைந்துள்ளதால், இருவரும் சந்திக்க வாய்ப்புள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இந்த நிலையில், அஜித்தின் கார் பந்தயத்தை முதலமைச்சர் விஜய் நேரில் பார்வையிடுவாரா, இருவரும் சந்தித்துப் பேசுவார்களா என்பது ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.



