Latestமலேசியா

லோட்டஸ் கேர் & பல்வேறு சுகாதார அமைப்புகள் இணைந்து நடத்திய மருத்துவ & இரத்த தான முகாம்

பெட்டாலிங் ஜெயா, ஏப்ரல்-22-சிலாங்கூர், பெட்டாலிங் ஜெயாவில் உள்ள Goodday Milk Factory-யில் இன்று காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மருத்துவ முகாம் மற்றும் இரத்த தான இயக்கம் நடைபெற்றது.

Lotus Care மற்றும் பல்வேறு சுகாதார அமைப்புகள் இணைந்து நடத்திய இம்முகாம், சமூக சுகாதாரத்தை மேம்படுத்தவும், இரத்த தானத்தின் முக்கியத்துவத்தை வலியுறுத்தவும் நோக்கமாகக் கொண்டது.

Lotus குழுமத்தின் நிறுவனரும், தலைமை செயலதிகாரியுமான தான் ஸ்ரீ ஆர். துரைசிங்கம் முன்னிலை வகிக்க, பெட்டாலிங் ஜெயா நாடாளுமன்ற உறுப்பினர் Lee Chean Chung இதனை அதிகாரப்பூர்வமாகத் தொடக்கி வைத்தார்.

மூன்றாவது ஆண்டாக நடத்தப்படும் இம்முகாமில், மருத்துவப் பரிசோதனைகள், மார்பக புற்றுநோய் பரிசோதனை, புற்றுநோய் கண்டறியதல், மனநலப் பரிசோதனை போன்றவற்றோடு, மருத்துவ ஆலோசனை, உணவியல் ஆலோசனைகள், நீரிழிவு ஆலோசனைகள் வழங்கப்பட்டன.

தவிர, நியூமோகோகல் தடுப்பூசி RM150 என்ற சிறப்பு சலுகை விலையில் வழங்கப்பட்டது.

1,000 பேரை எதிர்பார்த்து நடத்தப்பட்ட இந்நிகழ்வுக்கு நல்ல வரவேற்புக் கிடைத்ததாக, Lotus Care-ரின் மருத்துவ இயக்குநர் Dr விக்னேஸ்வரி முத்துக் குமரன் வணக்கம் மலேசியாவிடம் கூறினார்.

Lotus Care வழங்கும் பராமரிப்புச் சேவைகள் குறித்தும் விக்னேஸ்வரி விளக்கினார்.

உள்ளூர் சமூகங்களின் சுகாதாரப் பராமரிப்பை ஊக்குவிக்க இதுபோன்ற மருத்துவ முகாம்கள் அவசியமென வலியுறுத்திய Lee Chean Chung, இதற்கு ஏற்பாடு செய்த Lotus Care-ரைப் பாராட்டினார்.

இந்த மருத்துவ மற்றும் இரத்த தான முகாம் சுற்று வட்டார மக்களின் பயனுள்ள வகையில் அமைந்தது.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!