
சிரம்பான், ஆகஸ்ட்-2 – 8 ஆண்டுகளுக்குப் பிறகு பாரிசான் நேஷனல் தலைமையில் நெகிரி செம்பிலானில் ஆட்சி அமைந்துள்ள நிலையில் மாநிலத்தின் புதிய மந்திரி பெசாராகப் பொறுப்பேற்றுள்ள டத்தோ இஸ்மாயில் லாசிம், நாளை ஆகஸ்ட் 3-ஆம் தேதி திங்கட்கிழமை அம்மாநிலத்திற்குச் சிறப்புப் பொது விடுமுறை என அறிவித்துள்ளார்.
இன்றையப் பதவியேற்பு விழாவுக்குப் பிறகு செய்தியாளர்களிடம் உரையாற்றிய அவர், மாநிலத் தேர்தலில் திரளாகப் பங்கேற்று வாக்களித்த நெகிரி செம்பிலான் மக்களுக்கு நன்றி தெரிவிக்கும் வகையில் இந்த சம்பவ விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்தார்.
தேர்தல் அமைதியாகவும் நேர்த்தியாகவும் நடைபெற ஒத்துழைப்பு நல்கிய வாக்காளர்கள், தேர்தல் அதிகாரிகள் மற்றும் பாதுகாப்பு ஊழியர்களுக்கு அவர் பாராட்டு தெரிவித்தார்.
நாளை சிறப்பு விடுமுறை என்பதால், அனைத்து அரசு அலுவலகங்களும் மீண்டும் வரும் செவ்வாய்க்கிழமை முதல் வழக்கம் போல் இயங்கும்.
இந்த திடீர் விடுமுறை அறிவிப்பு நெகிரி செம்பிலான் மக்களுக்கு மகிழ்ச்சியை அளித்துள்ளது.



