Latestமலேசியா

வீட்டின் பின்புறம் எதிர்பாராத விதமாக வந்த அழையா விருந்தாளி – கடல் ஆமையைக் கண்டு அதிர்ச்சியடைந்த பெண்

கோலாலம்பூர், செப்-18-இரவு நேரத்தில் கரைக்கு வந்த கடல் ஆமை ஒன்று, பெண்ணொருவரின் வீட்டின் பின்புறம் வந்த சம்பவம் சமூக வலைத்தளங்களில் கவனத்தை ஈர்த்துள்ளது. அப்பெண் அந்த ஆமையின் புகைப்படங்களை Threads தளத்தில் பகிர்ந்துள்ளார்.

இந்த ஆமை எங்கள் சிறப்பு விருந்தாளி. அதனை வீட்டின் பின்புறம் காண்டோம் என அப்பெண் அப்பதிவில் குறிப்பிட்டிருந்தார். அப்பதிவு இதுவரை 3,35,000-க்கும் மேற்பட்ட பார்வைகளைப் பெற்றுள்ளது.

அந்தக் கடல் ஆமை இரவு 8 மணிக்குப் பிறகு கரைக்கு வந்ததாகவும், மணலில் குழி தோண்டுவதற்கு சுமார் மூன்று மணி நேரம் எடுத்ததாகவும் அப்பெண் விவரித்திருந்தார். எனினும், அது முட்டையிட்டதா என்பது தனக்குத் தெரியாது என்றும் அவர் கூறியிருந்தார்.

அவரது அப்பதிவைப் பார்த்த சில இணையவாசிகள் ஆமை மீண்டும் வந்தால் அதைத் தொந்தரவு செய்ய வேண்டாம் என்றும், பிரகாசமான விளக்குகள் அல்லது கேமரா ஃப்ளாஷ் பயன்படுத்துவதைத் தவிர்க்குமாறும் கருத்து தெரிவித்திருந்தனர். மேலும், அது குறித்து மீன்வளத் துறையிடம் தெரியப்படுத்துமாறும் அவர்கள் கேட்டுக் கொண்டிருந்தனர்.

அச்ச்மபவம் எங்கு நிகழ்ந்தது, அக்கடல் ஆமை எந்த இனத்தைச் சேர்ந்தது உள்ளிட்ட தகவல் ஏதும் இதுவரை உறுதிப்படுத்தப்படவில்லை.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!