Latestமலேசியா

வூஹான் ஆய்வக நிதியுதவி விவகாரம்; அந்தோனி ஃபௌசிக்கு எதிராக துள்சி கப்பார்ட் அதிரடி குற்றச்சாட்டு

வாஷிங்டன், ஜூன்-19-அமெரிக்க முன்னாள் அதிபர் ஜோ பைடனின் முன்னாள் மருத்துவ தலைமை ஆலோசகரான Dr. Anthony Fauci, சீனாவின் வூஹான் ஆய்வகத்தில் ஆபத்தான ஆய்வுகளுக்கு நிதியுதவி வழங்கியதாக, அமெரிக்க தேசிய உளவுத்துறை இயக்குநராகத் தனது பதவிக்காலத்தின் இறுதி நாளில் துள்சி கப்பார்ட் (Tulsi Gabbard) அதிரடி குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார்.

​இதுவரை வெளிவராத இரகசிய ஆவணங்களை வெளியிட்ட துள்சி, கோவிட்-19 பரவலுக்குக் காரணமான வூஹான் நச்சுயிரி நிறுவனத்தில், வௌவால் கொரோனா வைரஸ்கள் மீதான விபரீத ‘gain-of-function’ ஆய்வுகளுக்கு ஃபௌசி மில்லியன் கணக்கான அமெரிக்க வரிப்பணத்தை வழங்கியதாகக் குறிப்பிட்டுள்ளார்.

​ஆய்வகத்தில் இருந்து வைரஸ் கசிந்ததற்கான ஆதாரங்களை மூடிமறைக்க, உளவுத்துறையை ஃபௌசி தவறாகப் பயன்படுத்தியதாக அவரது அலுவலக அறிக்கை கூறுகிறது.

​மேலும், 2024-ஆம் ஆண்டு நாடாளுமன்ற விசாரணையின் போது, உளவுத்துறை அதிகாரிகளுடன் வைரஸ் ஆராய்ச்சி குறித்து விவாதித்ததை மறுத்து ஃபௌசி பொய் சாட்சியம் அளித்தார் என்றும் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

​’deep state’ எனப்படும் அதிகார வர்க்கத்தின் பின்னணி வியூகங்களை ஃபௌசி பயன்படுத்தியதாகவும் துள்சி சாடியுள்ளார்.

இக்குற்றச்சாட்டுகள் குறித்து ஃபௌசி தரப்பில் இருந்து இதுவரை எந்தப் பதிலும் வரவில்லை.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!