Latestஉலகம்

அதிகமான சீர்த்திருத்தங்ளை அமல்படுத்த பிரதமர் அன்வார் நம்பிக்கை

டோஹா , மே 14 – Madani அரசாங்கத்தின் கீழ் உள்ள அனைத்துக் கட்சிகளிடையேயும் வலுவான புரிந்துணர்வு காரணமாக அரசாங்கத்தில் மேலும் சீர்திருத்தங்களை மேற்கொள்ள முடியும் என பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் நம்பிக்கை தெரிவித்தார். தமது பதவிக் காலத்தின் தொடக்கத்தில் தமது நிர்வாகம் சந்தேகங்களை எதிர்கொண்ட போதிலும், கூட்டணியின் கீழ் உள்ள அனைத்து கட்சிகளும் சீர்திருத்தங்களில் குறிப்பாக மக்களின் நலனை உறுதி செய்வதில் தொடர்ந்து பணியாற்றி வருவதாக அன்வார் கூறினார்.
இந்த பெருமையும் பாராட்டும் தமது தலைமையிலான கட்சிக்கும், சரவாக் மற்றும் சபாவின் கூட்டணி உட்பட ஒற்றுமை அரசாங்கத்தின் அனைத்து தரப்புக்கும் சென்றடையும் என அவர் கூறினார்.

ஒற்றுமை அரசாங்கம் அமைக்கப்பட்டு ஒன்றரை ஆண்டுகளாகிவிட்டது. கூட்டணி கட்சியிலிருந்து ஒருவர் கூட தம்மிடம் லஞ்ச ஊழலுக்கு எதிரான நடவடிக்கையில் மெத்தன போக்குடன் செயல்படும்படியோ , அல்லது அரசாங்கத்தின் சீர்த்திருத்தங்களை எதிர்ப்பதாக எவரும் கூறவில்லை என்றும் அன்வார் சுட்டிக்காட்டினார். அதனால்தான் இந்த விவகாரத்தில் என்னால் ஆர்வத்துடனும் நம்பிக்கையுடனும் செய்ய முடிகிறது. மேலும் மலேசியா இந்த சீர்த்திருத்தங்களை தொடர முடியும் என்று தாம் நம்புவாக கட்டார் தேசிய நூலகம், Hamad bin Khalifa பல்கலைக்கழகத்தில் பொது உரையின் போது அன்வார் தெரிவித்தார்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!