Latestமலேசியா

அதிகாலை 4 மணிக்கே ‘வேலைக்குச் சென்ற’ நபர்; தொலைத்தொடர்பு கேபிள்களைத் திருடிய காட்சி வைரல்!

ஈப்போவில் அதிகாலையிலேயே தொலைத்தொடர்பு கேபிளைத் திருட வந்த நபரின் சிசிடிவி காட்சி சமூக ஊடகங்களில் பரவி வருகிறது.

நவம்பர் 10ஆம் தேதி அதிகாலை 4.47 மணியளவில் நடந்ததாகக் கூறப்படும் அச்சம்பவத்தில், தொப்பி அணிந்த நபர் ஒருவர் சுவரில் ஏறி, கேபிளை அகற்றி எடுத்துச் செல்வது பதிவாகியுள்ளது. அந்தக் காட்சியை அதன் உரிமையாளர் Threads தளத்தில் பகிர்ந்துள்ளார்.

இதனைப் பார்த்த இணையவாசிகள், “காலை 4 மணிக்கே ‘வேலைக்குக்’ கிளம்பிவிட்டாரே… என்ன ஓர் உழைக்கும் ஆர்வம்!” எனக் கிண்டலாகக் கருத்துப் பதிவிட்டுள்ளனர். மேலும் சிலர், தங்கள் அலுவலகங்களிலும் இதுபோன்ற கேபிள் திருட்டுச் சம்பவங்கள் நடந்துள்ளதாகப் பகிர்ந்துள்ளனர்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!