Latestமலேசியா

அம்பாங்கில் சிறார் பராமரிப்பு நிலையம்போல் இருந்த வீட்டில் 10 மில்லியன் ரிங்கிட் போதைப் பொருள் பறிமுதல்

கோலாலம்பூர், மார்ச் 15 – அம்பாங்கில் சிறார் பராமரிப்பு மையம்போல் இருந்த வீட்டில் செயல்பட்ட போதைப் பொருள் கும்பலை முறியடித்த போலீசார் 10 மில்லியன் ரிங்கிட் போதைப் பொருளை பறிமுதல் செய்தனர், செராஸ் மற்றும் அம்பாங்கில் மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கையில் அந்த கும்பல் முறியடிக்கப்பட்டதாக கோலாலம்பூர் போலீஸ் தலைவர் கமிஷனர் டத்தோ Alaudeen Abdul Majid தெரிவித்தார். செராஸில் மேற்கொள்ளப்பட்ட முதல் நடவடிக்கையின்போது 38 வயதுடைய நபர் கைது செய்யப்பட்டான். அவனிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணையை தொடர்ந்து அம்பாங் , Taman Dagang கில் உள்ள ஒரு வீட்டில் 213 கிலோ ஷாபு உட்பட போதை மாத்திரைகளும் பறிமுதல் செய்யப்பட்டன. அந்த போதைப் பொருளின் மதிப்பு 10.8 மில்லியன் ரிங்கிட் ஆகம் என Allaudeen தெரிவித்தார்.

வீடு ஒன்றை புதுப்பித்து போலீசிற்கு சந்தேகம் வராமல் இருப்பதற்காக அதன் உள்ளே இருக்கும் சுவர்களில் பல்வேறு கார்டூன் படங்களை வரைந்து வைத்திருந்தனர். மாதத்திற்கு 3,000 ரிங்கிட் வாடகைக்கு எடுத்துள்ள அந்த வீட்டில் கடந்த ஆண்டிலிருந்து அந்த கும்பல் செயல்பட்டுள்ளதும் தெரியவந்ததாக கமிஷனர் Allaudeen தெரிவித்தார். போதைப் பொருள் மறைத்து வைப்பதற்காக அந்த வீடு பயன்படுத்தப்பட்டு வந்ததாக அவர் கூறினார்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!