Latestமலேசியா

இந்திய சமூகத்திற்கான உயரிய இலக்கை கொண்ட திட்டத்திற்கான பட்டறையை மித்ரா ஏற்பாடு செய்தது

புத்ரா ஜெயா, மார்ச் 20 – இந்திய சமூகத்திற்கான உயரிய இலக்கு மற்றும் நோக்கத்தைக் கொண்ட திட்டத்தில் கவனத்தை செலுத்தக்கூடிய நோக்கில் பட்டறையை மித்ரா ஏற்பாடு செய்துள்ளது என தேசிய ஒற்றுமைத்துறை அமைச்சர் டத்தோ Aaron Ago Dagang தெரிவித்திருக்கிறார். தற்போது தேசிய ஒற்றுமைத்துறை அமைச்சின் கீழ் மித்ரா இருந்து வருவதால் 2021 ஆம் ஆண்டில் வரையப்பட்ட (PTMI) எனப்படும் இந்திய சமுக நடவடிக்கை திட்டத்தின் கீழ் பல்வேறு கட்டுப்பாடுகளை மறுஆய்வு செய்யப்பட வேண்டிய அவசியம் இருப்பதாக அவர் கூறினார். இந்திய சமூகத்திற்கான உயர் தாக்கத் திட்டங்களில் அதிக கவனம் செலுத்தி, மித்ராவின் திசையை மறுசீரமைக்கும் நோக்கத்தை இந்த பட்டறை கொண்டுள்ளதாக Aaron தெரிவித்தார்.

PEMANDU அசோசியேட் ஆலோசனை நிறுவனம் PTMI பற்றிய விரிவான ஆய்வை நடத்தியது. இந்த ஆய்வின் மூலம், 23 செயல்முறைத் திட்டங்களில் ஆறு மட்டுமே மித்ராவின் அதிகார வரம்பிற்கு உட்பட்டது என்று கண்டறியப்பட்டது. எனவே இந்த விவகாரங்களில் மித்ராவின் நம்பிக்கையை பெறுவதற்கு இந்த பட்டறையில் காணப்படும் முடிவுகள் உதவும். எனவே மித்ராவின் நோக்கம் மறுஆய்வு செய்யப்படுவதாகவும் இதன் மூலம் நேரம் விரயமாக்கப்படுவதாக சில தரப்பினர் கூறுவதையும் Aaron நிராகரித்தார். மித்ரா அதிகாரிகள், பொது தனியார் மற்றும் , சமய இயக்கங்களின் பிரதிநிதிகள் கலந்துகொள்ளும் இரண்டு நாள் பட்டறையை தொடக்கிவைத்து பேசியபோது அவர் இதனை தெரிவித்தார்.

வறுமையை துடைத்தொழிப்பது, குடியுரிமை மற்றும் இதர ஆவணங்கள் , சமய விவகாரங்கள் மற்றும் , பெண்கள் தொடர்பான சமூக நலன்கள் போன்ற அம்சங்கள் தொடர்பான செயத் திட்டங்களை வரைவதும் இந்த பட்டறையில் கவனம் செலத்தப்படும் என கூறப்பட்டது.
இதனிடையே அண்மையில் KK MARTS வர்த்தக மையத்தில் Allah என்ற பதத்துடன் காலுறைகள் விற்பனை செய்வது தொடர்பான விவகாரத்தில் ஏற்பட்ட சிக்கலைத் தீர்ப்தில் உள்துறை அமைச்சிடம் ஒற்றுமைத் துறை அமைச்சு விட்டுவிடுவதாக Aaron தெரிவித்தார். நாங்கள் ஒற்றுமைக்கான அமைச்சு, பிரிவினையை விரும்பவில்லை, ஒற்றுமையையே விரும்புகிறோம் என அவர் கூறினார். இந்த விவகாரத்திற்கு தீர்வு காண்பதற்கு உள்துறை அமைச்சே மிகவும் பொருத்தமானது என அவர் தெரிவித்தார்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!