Latestஉலகம்

இந்தோனேசிய விமான நிறுவனத்தின் விமானிகள் நடுவானில் தூங்கினர்; பாதுகாப்பு நிறுவனம் தகவல்

ஜகர்த்தா, மார்ச் 10 – வர்த்தக விமானத்தின் இரு விமானிகளும் அண்மையில் விமானத்தில் தூங்கியது விசாரணையில் தெரியவந்ததை தொடர்ந்து இந்தோனேசிய விமானப் பாதுகாப்பு நிறுவனம் விமானிகளுக்கான சிறந்த சோர்வு கண்காணிப்பு வழிமுறைகளுக்கு அழைப்பு விடுத்துள்ளது.

ஜனவரி 25 ஆம்தேதியன்று தென் கிழக்கு ‘Sulawesi’யிலிருந்து ஜகார்த்தாவிற்கு சேவையில் ஈடுபட்டிருந்த ‘Batik Air’ விமானத்தின் விமானியும் துணை விமானியும் ஒரே நேரத்தில் சுமார் 28 நிமிடங்கள் தூங்கிக் கொண்டிருந்ததாக தேசிய போக்குவரத்து பாதுகாப்புக் குழுவின் (KNKT) முதற்கட்ட அறிக்கை தெரிவித்திருக்கிறது. பிப்ரவரி பிற்பகுதியில் ‘AFP’ செய்தி நிறுவனத்தின் இணையதளத்தில் இந்த அறிக்கை பதிவேற்றப்பட்டது. இந்தோனேசியா தனது ஆயிரக்கணக்கான தீவுகளை இணைக்க விமானப் போக்குவரத்தை பெரிதும் நம்பியிருந்தாலும், அந்த தீவுக் கூட்டங்கள் மோசமான வான் பாதுகாப்பு பதிவைக் கொண்டதாக உள்ளது. விமானத்திற்கு முந்தைய இரவு விமானிகளில் ஒருவர் போதுமான அளவு ஓய்வெடுக்கவில்லை என்று தெரியவந்தது.

விமானம் புறப்பட்ட சுமார் அரை மணி நேரத்திற்குப் பிறகு, கேப்டன் தனது இரண்டாவது கட்டளை அதிகாரியிடம் சிறிது நேரம் ஓய்வெடுக்க அனுமதி கேட்டதால் அவரது கோரிக்கை ஏற்றுக்கொள்ளப்பட்டது. துணை விமானி பின்னர் விமானத்தை செலுத்தும் பொறுப்பை ஏற்றுக்கொண்டார், ஆனால் கவனக்குறைவாக அவரும் தூங்கிவிட்டார் என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டது. துணை விமானியால் கடைசியாகப் பதிவு செய்யப்பட்ட பரிமாற்றத்திற்கு சில நிமிடங்களுக்குப் பிறகு, ஜகார்த்தாவில் உள்ள கட்டுப்பாட்டு மையம் விமானத்தைத் தொடர்பு கொள்ள முயன்றது. அதற்கு பதில் கிடைக்கவில்லை.

கடைசியாக பதிவு செய்யப்பட்ட தொடர்பின் மூலம் 28 நிமிடங்களுக்குப் பிறகு, விமானி விழித்துக்கொண்டார் . எனினும் அவரது துணை விமானி தூங்கிக்கொண்டிருப்பதையும் விமானம் சரியான விமானப் பாதையில் இல்லை என்பதையும் உணர்ந்தார். அவர் உடனடியாக தனது சக ஊழியரை எழுப்பி, ஜகார்த்தாவில் இருந்து வந்த அழைப்புகளுக்கு பதிலளித்து, விமானப் பாதையை சரிசெய்தார் என்று ‘AF’ பதிவிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளது.

இந்த சம்பவத்திற்கு பிறகு அந்த ஏர்பஸ் A 320 விமானத்தின் 153 பயணிகளும் நான்கு பணியாளர்களும் பத்திரமாக தரையிறக்கப்பட்டனர். அந்த விமானிகளின் அடையாளத்தை விசாரணை அதிகாரிகள் வெளியிடவில்லை. அவர்கள் இருவரும் 32 மற்றும் 42 வயதுடைய இந்தோனேசியர்கள் என்று தெரிவிக்கப்பட்டது.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!