Latest

ஏழை மக்கள் துயருறும் போது நாடு முன்னேறி என்ன பயன்? பிரதமர் கேள்வி

ஜொகூர் பாரு, ஏப்ரல்-19 என்னதான் நாடு அபரிமித வளர்ச்சிக் கண்டாலும், ஏழை மக்களை அரசாங்கம் கண்டுகொள்ளவில்லை என்றால் ஒரு பயனும் இல்லை என பிரதமர் கூறியிருக்கின்றார்.

மலாய்க்காரர், சீனர், இந்தியர், அல்லது பூர்வக்குடி என எந்த பேதமும் இல்லாமல் அனைத்து ஏழை மக்களுக்கும் உதவ வேண்டியது அரசாங்கத்தின் கடமை என டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிம் சொன்னார்.

அடுத்து, பரம ஏழைகள் அற்ற மாநிலமாக ஜொகூர் உருவெடுக்க வேண்டும் என்றும் தனது எதிர்ப்பார்ப்பை அவர் வெளியிட்டார்.

மேம்பாட்டுத் திட்டங்களை அடையாளம் காண வேண்டி ஜொகூருக்கு நேற்று வருகை மேற்கொண்ட போது பிரதமர் அவ்வாறு கூறினார்.

ஜொகூரில் தற்போது பரம ஏழைகள் பட்டியலில் இரண்டாயிரத்திற்கும் குறைவான குடும்பங்களே இருப்பது, தமது விருப்பம் விரைவிலேயே நிறைவேறும் என்ற நம்பிக்கையைக் கொடுப்பதாக டத்தோ ஸ்ரீ அன்வார் சொன்னார்.

ஜொகூர் மாநிலம் இப்போது மிகவும் பெருமையளிக்கும் வகையில் வளர்ச்சியைப் பதிவுச் செய்துள்ளது.

அது தொடர வேண்டுமென்றால் அரசு நிர்வாகத்தில் லஞ்ச லாவண்யம் இல்லாமல் பார்த்துக் கொண்டு, மீனவர்கள் முதல் டேக்சி ஓட்டுநர்கள், உடல் உழைப்புத் தொழிலாளர்கள் வரை  அனைவரின் நலன் காக்கும் அரசாக விளங்க வேண்டும் என்றும் டத்தோ ஸ்ரீ அன்வார் கேட்டுக் கொண்டார்.

ஜொகூர் மாநில அளவில் நடத்தப்பட்ட பிரதமருடனான மடானி நோன்புப் பெருநாள் கொண்டாட்ட நிகழ்வில் பங்கேற்று உரையாற்றிய போது அவர் அவ்வாறு சொன்னார்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!