Latestமலேசியா

கார் மீது மரம் விழுந்ததில் ஆடவர் மரணம்

நபாவான் , ஜூன் 2 -சபாவில் ஜாலான் செபுலுட் – கலாபகான்
(Jalan Sepulut – Kalabakan), சாலையில் மரம் ஒன்று 33 வயது ஆடவர் ஒருவர் ஓட்டிச் சென்ற Toyota Hilux Vigo வாகனத்தின் மீது விழுந்ததில் அவர் உயிரிழந்தார்.

நேற்று மதியம் மணி 12.20 அளவில் அந்த துயரச் சம்பவம் நிகழ்ந்ததாக அவசர அழைப்பு பெறப்பட்டதைத் தொடர்ந்து தீயணைப்புத்துறை சம்பவ இடத்திற்கு சென்றது.

தீயணைப்பு துறை சம்பவ இடத்திற்கு செல்லும் முன்னரே பொதுமக்கள் உதவியுடன் அந்த நபர் வாகனத்திலிருந்து வெளியே மீட்கப்பட்டு
சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு கொண்டுச் செல்லப்பட்டார் .

இருப்பினும் பாதிக்கப்பட்டவர் இறந்துவிட்டதாக மருத்துவ அதிகாரிகள் உறுதிப்படுத்தினர்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!