Latestமலேசியா

காற்று கொந்தளிப்பில் பாதிக்கப்பட்ட சிங்கப்பூரின் SQ 321 விமானத்தின் 16 மலேசிய பயணிகளில் எண்மர் தாயகம் திரும்பினர்

ஷங்காய், மே 28 – காற்று கொந்தளிப்பில் பாதிக்கப்பட்ட சிங்கப்பூரின் SQ 321 விமானத்தின் 16 மலேசிய பிரஜைகளில் எண்மர் இன்றுவரை தாயகம் திரும்பியுள்ளனர். அந்த சம்பவத்தில் காயம் அடைந்த மற்றொரு பயணியான மலேசிய பிரஜை மருத்துவமனையிலிருந்து வெளியேறுவதற்கு அனுமதிக்கப்பட்டார். விரைவில் அவர் மலேசியா திரும்புவதற்கான நடவடிக்கைக்காக காத்திருக்கிறார் என வெளியுறவுத்துறை துணையமைச்சர் அமைச்சர் டத்தோ Mohamad Alamin தெரிவித்தார்.

அந்த விமான பயணிகளில் மேலும் ஏழு மலேசிய பிரஜைகள் பேங்காக்கிலுள்ள Samitivej Sukhumvit மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தனர், அவர்கள் அனைவரும் தற்போது வழக்கமான வார்டுகளுக்கு மாற்றப்பட்பட்டதோடு அவர்களது நிலைமை சீராக இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. பாதிக்கப்பட்ட மற்றொரு மலேசிய பிரஜையான SQ 321 விமானத்தின் ஊழியர்களில் ஒருவர் இன்று சிங்கப்பூர் திரும்புவார் என தெரிவிக்கப்பட்டுள்ளது. பாதிக்கப்பட்ட அனைத்து மலேசிய பிரஜைகளும் விரைவில் தாயகம் திரும்புவதற்கான ஏற்பாடுகளை பேங்காக்கிலுள்ள மலேசிய தூதரக அலுவலகம் மற்றும் தாய்லாந்திற்கான மலேசிய தூதர் டத்தோ Jojie Samuel கவனித்து வருவதாக Mohamad Alamin வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்தார்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!