Latestமலேசியா

காலுறை பிரச்னையில் விசாரணை நடத்துவீர் அதிகப்படியான தண்டனை வேண்டாம் – பிரதமர் அன்வார் அறைகூவல்

புத்ரா ஜெயா, மார்ச் 21 – Allah என்ற வார்த்தையைக் கொண்ட காலுறைகளின் சர்ச்சைக்குரிய பிரச்னையை சட்டத்தின்படி விசாரிக்கப்பட வேண்டும் என்பதோடு இந்த விவகாரத்தில் அதிகப்பட்ச தண்டனை வழங்கப்பட வேண்டியதில்லை என பிரதமர் டத்தோஸ்ரீ Anwar Ibrahim வலியுறுத்தியுள்ளார். குற்றம் நடந்திருப்பதால் , சட்டப்படி விசாரணை மற்றும் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதுதான் தமது நிலைப்பாடாக இருப்பதாகவும் அதுவே போதுமானது என அன்வார் தெரிவித்தார். இந்த விவகாரத்தை மேலும் தொடரவேண்டியதில்லையென என்பதோடு இதிலிருந்து மீண்டு நாம் முன்னேறிச் செல்ல வேண்டும் என்றார். இந்த விவகாரத்திலேயே ஏன் நாம் இருக்க வேண்டும் என புத்ரா ஜெயாவில் ஊடகவியலாளர்களுடன் நேற்றிரவு நோன்பு துறக்கும் நிகழ்வில் கலந்துகொண்டபோது பிரதமர் அன்வார் தெரிவித்தார்.

சமயத்தை குறிப்பாக இஸ்லாத்தை அவமதிக்காதீர்கள். இந்த நாட்டில் ஒரு பெரிய பேரழிவு ஏற்படுவது போல் இந்த விவாதத்தை தொடர வேண்டாம். நாம் தவறுசெய்வதுபோல் சிலர் தவறு செய்கிறார்கள் என்றும் அன்வார் தெரிவித்தார். இவ்விவகாரத்தில் அரசாங்க அரசியல்வாதிகளிடையே ஏற்பட்ட நட்புறவு பாணியிலான சாடல்கள் , தமது அரசாங்கம் ஜனநாயகமானது என்றும், விமர்சனங்களை வெளிப்படுத்தும் சுதந்திரத்தை நம்புவதாகவும் அன்வார் கூறினார். Madani அரசாங்கம் ஜனநாயகமானது. மக்கள் என்ன சொல்ல முடியும் என்பதை கட்டுப்படுத்தும் முறையை நாங்கள் நடைமுறைப்படுத்தவில்லை என்று Anwar மேலும் கூறினார். கடந்த வாரம் Bandar Sunway யில் K.K .Mart விற்பனை நிலையத்தில் “Allah ” என்ற வாசகங்களைக் கொண்ட காலுறைகளின் படங்கள் சமூக ஊடகங்களில் வைரலானதால் சர்ச்சை எழுந்தது.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!