
கோலாலம்பூர், ஜனவரி-15, கோலாலம்பூர், கம்போங் லீமாவ் PPR குடியிருப்பின் புளோக் 94 அருகேயுள்ள கிள்ளான் ஆற்றில், உள்ளூர் ஆடவர் என நம்பப்படுபவரின் சடலம் கண்டெடுக்கப்பட்டது.
ஆற்றில் சடலம் மிதப்பதாக நேற்று காலை 11.30 மணி வாக்கில் கோலாலம்பூர் நடவடிக்கை மன்றத்துக்கு MERS 999 அவசர அழைப்புச் சேவையின் வழி தகவல் கிடைத்தது.
இதையடுத்து பந்தாய் தீயணைப்பு நிலையத்தைச் சேர்ந்த 7 வீரர்கள் சம்பவ இடம் விரைந்தனர்.
கயிறு மற்றும் stretchers எனப்படும் தூக்குப் படுக்கையைப் பயன்படுத்தி நண்பகல் 12.30 மணிக்கு சடலத்தை அவர்கள் மேலே கொண்டு வந்தனர்.
அடையாள ஆவணங்கள் எதுவும் உடன் காணப்படவில்லை.
மேல் நடவடிக்கைக்காக சடலம் பின்னர் போலீஸிடம் ஒப்படைக்கப்பட்டது.