Latestமலேசியா

கிள்ளாளில் வெள்ள தடுப்பு நடவடிகையில் பாதிக்கும் மேற்பட்டவை தோல்வி கண்டன

கிள்ளான், மார்ச் 6 – கிள்ளான் மாவட்டத்தில் வெள்ள தடுப்பு நடவடிக்கையில் பாதிக்கும் மேற்பட்டவை தோல்வி கண்டதாக சிலாங்கூர் மீதான தலைமை கணக்காய்வாளரின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மாநில வடிகால் நீர்ப்பாசனத்துறை, கிள்ளான் அரச மாநகர் மன்றம், ஷா அலாம் மாநகர் மன்றம் ஆகியவை 10 வெள்ள தடுப்பு நடவடிக்கைகளை கூட்டாக மேற்கொண்டன. வெள்ள தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொண்ட பின்னர் ஐந்து பகுதிகளில் 2016ஆம் ஆண்டிலிருந்து 2022 ஆம் ஆண்டுவரை ஒன்று முதல் நான்கு முறைகளில் வெள்ளம் ஏற்பட்டுள்ளது.

Bukit Kamuning , Taman Rashna, Taman Intan , Jalan Bakti. Jalan Tengku Kelana ஆகியவவை தொடர்ந்து வெள்ளம் ஏற்படும் ஐந்து பகுதிகளாகும். அந்த ஐந்து இடங்களிலும் அதிகமான நீரோட்டத்தை அங்குள்ள வடிகால் நீர்ப்பாசன முறை தடுக்க முடியவில்லை . சாலைகள் நிர்மாணிப்பு மற்றும் நெடுஞ்சாலைகளுக்கு அருகே அளவிற்கு அதிகமாக நீரோட்டமும் வெள்ளத்திற்கு காணமாக இருப்பதாக அரசாங்க தலைமை கணக்காய்வாளர் அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!