Latestமலேசியா

குண்டர் கும்பலுடன் தொடர்பு என அவதூறு: தியோ நீ சிங் திட்டவட்ட மறுப்பு

கூலாய், ஆகஸ்ட்-29,ஜோகூரில் குண்டர் கும்பல் நடவடிக்கைகள் மற்றும் விபத்து வழக்குடன் தம்மைத் தொடர்புபடுத்தி பரப்பப்படும் குற்றச்சாட்டுகளைத் தொடர்பு துணை அமைச்சர் தியோ நீ சிங் திட்டவட்டமாக மறுத்துள்ளார்.

​தமக்கு எதிராக அவதூறு பரப்புவதற்காகவே புதிய சமூக ஊடகக் கணக்குகள் உருவாக்கப்பட்டுள்ளதாகவும், தமது 18 ஆண்டுகால அரசியல் வாழ்க்கையில் பொது நிகழ்வுகளில் எடுக்கப்பட்ட இயல்பான புகைப்படங்கள் தவறாகச் சித்தரிக்கப்படுவதாகவும் கூலாய் நாடாளுமன்ற உறுப்பினருமான தியோ தெரிவித்தார்.

ஜோகூர் DAP தலைவருமான அவர், சம்பந்தப்பட்ட விபத்து வழக்கில் 13 பேர் கைதுச் செய்யப்பட்டுள்ளதை வரவேற்றார்

இந்நிலையில், தமக்கெதிரான இச்சம்பவம் தொடர்பாக போலீஸ் மற்றும் மலேசியத் தொடர்பு – பல்லூடக ஆணையமான MCMC-யிலும் தியோ நீ சிங் புகார் அளித்துள்ளார்.

முன்னதாக, தியோ மற்றும் DAP-யைத் தொடர்புப்படுத்தும் அவதூறு பதிவுகள் குறித்து, Senai சட்டமன்ற உறுப்பினர் Wong Bor Yang போலீஸில் புகார் செய்தது குறிப்பிடத்தக்கது.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!