Latestமலேசியா

குவா மூசாங்கில் பேருந்து ஓட்டுநர் இருக்கைக்குப் பின் போதைப்பொருள் பறிமுதல்: 2 ஓட்டுநர்கள் கைது

குவா மூசாங், ஜூலை-29-கிளந்தான், குவா மூசாங்கில் விரைவுப் பேருந்து ஒன்றில் போதைப்பொருள் கைப்பற்றப்பட்டதை அடுத்து, 2 பேருந்து ஓட்டுநர்கள் கைதுச் செய்யப்பட்டுள்ளனர்.

திங்கள்கிழமை குவா மூசாங் R&R பகுதியில் மேற்கொள்ளப்பட்ட சோதனையின் போது, 39 மற்றும் 46 வயதான அவ்விருவரையும் போலீஸார் கைதுச் செய்தனர்.

​ஓட்டுநர் இருக்கைக்குப் பின்னால் மறைத்து வைக்கப்பட்டிருந்த syabu வகைப் போதைப்பொருளை அதிகாரிகள் கண்டெடுத்தனர்.

இதனுடன் தொடர்புடைய சுமார் 2,500 மலேசிய ரிங்கிட் மதிப்புள்ள பொருட்களும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

​இருப்பினும், நடத்தப்பட்ட முதற்கட்ட போதைப்பொருள் பரிசோதனையில் இரு ஓட்டுநர்களுக்கும் போதைப்பொருள் பயன்படுத்தியதற்கான முடிவுகள் எதிர்மறையாகவே வந்துள்ளன.

​கைதுச் செய்யப்பட்ட இருவரிடமும் 1952-ஆம் ஆண்டு அபாயகர போதைப்பொருள் சட்டத்தின் கீழ் போலீஸார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!