Latestமலேசியா

கெந்திங்கில் சக நாட்டவரைக் கொலைச் செய்ததாக வங்கதேசி ஆடவர் மீது குற்றச்சாட்டு

பெந்தோங், ஏப்ரல் 16 – கெந்திங் மலையில் சக நாட்டவரைக் கொலைச் செய்ததாக வங்காளதேசி மீது இன்று பஹாங், பெந்தோங் மேஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் குற்றம் சாட்டப்பட்டது.

எனினும், கொலைக் குற்றம் உயர் நீதிமன்ற அதிகாரத்தின் கீழ் வருவதால், Ashraful Mia எனும் 34 வயது அவ்வாடவரிடம் வாக்குமூலம் எதுவும் பதிவுச் செய்யப்படவில்லை.

மார்ச் 31-ஆம் தேதியன்று Nazrul Molla எனும் 44 வயது சகப் பணியாளரை கட்டுமானத் தளமொன்றில் வைத்து Ashraful Mia-வும் அவனது கூட்டாளியும் கொலைச் செய்ததாக குற்றச்சாட்டில் கூறப்பட்டது.

கொலையுண்டவரின் சடலம் கருப்பு பிளாஸ்டிக் பையினுள் கண்டெடுக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

கூட்டாளி போலீஸ் பிடியில் சிக்காமல் இன்னும் தலைமறைவாக உள்ளான்.

குற்றம் நிரூபிக்கப்பட்டால், மரண தண்டனை அல்லது 30 முதல் 40 ஆண்டுகள் வரையிலான சிறைத்தண்டனை விதிக்கப்படலாம்.

மரண தண்டனை விதிக்கப்படாத பட்சத்தில், 12-கும் குறையாத பிரம்படிகள் விதிக்கப்பட வேண்டும் என சட்டம் சொல்கிறது.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!