Latestமலேசியா

கெப்போங்கில் மூதாட்டி மீது பெட்ரோல் ஊற்றி தீ வைத்த சந்தேக நபர் கைது

கோலாலம்பூர், ஆகஸ்ட்-19-கோலாலம்பூர், கெப்போங்கில் ஒரு மூதாட்டி மீது பெட்ரோல் ஊற்றி தீ வைத்த சந்தேக நபர் போலீஸாரால் கைதுச் செய்யப்பட்டுள்ளார்.

கடந்த ஆகஸ்ட் 9-ஆம் தேதி, தாமான் பூசாட் கெப்போங்கில் உள்ள 4 இலக்க எண் கணிப்பு மையத்தில் பணிபுரிந்து வந்த 62 வயது அம்மாது மீது, அடையாளம் தெரியாத நபர் ஒருவர் பெட்ரோல் ஊற்றி கொடூரமாகத் தீ வைத்தார்.

​இந்தத் தாக்குதலில் உடலில் 50 விழுக்காட்டு தீக்காயங்கள் ஏற்பட்டு அவர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

​சம்பவம் தொடர்பில் தீவிர விசாரணை நடத்தி வந்த போலீஸார், சம்பந்தப்பட்ட சந்தேக நபரை தற்போது வெற்றிகரமாக கைதுச் செய்துள்ளனர்.

இந்தக் கைது நடவடிக்கைக் குறித்த கூடுதல் விவரங்கள் போலீஸாரின் இன்றைய செய்தியாளர் சந்திப்பில் வெளியிடப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!