Latestமலேசியா

கோம்பாக்கில் முட்டைகளின் மஞ்சள் கருவை உட்கொண்ட பிறகு நச்சுணவால் 17 வயது இளைஞன் மரணம்

கோம்பாக் , ஜூன் 11 – முட்டையின் மஞ்சள் கருவை உட்கொண்ட பின் ஏற்பட்ட நச்சுணவின் பாதிப்பினால் 17 வயது இளைஞன் ஒருவன் உயிரிழந்தான். கோம்பாக் சுங்கை சின்சின்னில் (Sungai Cincin) உள்ள சமயப் பள்ளியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்டபின் தனது தாயார் Mihun மற்றும் மஞ்சள் கருவுடன் கொண்ட Mata Kerbau எனப்படும் முட்டையை கொண்டு வந்திருந்தார். தனது மகன் மூன்று முட்டைகளை மட்டுமே உட்கொண்ட பின் நச்சுணவினால் பாதிக்கப்பட்டு இறந்ததாக கமால் என்பவர் தெரிவித்தார். நச்சுணவு காரணமாக தனது மகன் மரணம் அடைந்தது பெரும் வேதனை மற்றும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருப்பதாக அவர் கூறினார். நல்லவேளையாக தனது இரண்டு பெண் குழந்தைகள் முட்டையை உட்கொள்ளவில்லையென அவர் கூறினார்.

இதனிடையே நச்சுணவு குறித்து தமக்கு தகவல் கிடைத்தாக சிலாங்கூர் இஸ்லாமிய சமயத்துறையின் இயக்குனர் டத்தோ முகமட் ஷாஷிஹான் அகமட் ( Mohamad Shahzihan Ahmad ) தெரிவித்தார். நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்களான 33 ஆசிரியர்கள் இந்த நிகழ்வில் சம்பந்தப்பட்டிருந்தனர். ஆனால் அவர்கள் எவரும் நச்சுணவு பிரச்னைக்கு உள்ளாகவில்லையென அவர் கூறினார். வெளியில் இந்த உணவை உட்கொண்ட இருவர் மரணம் அடைந்ததாக தமக்கு கிடைத்தது குறித்து பெரும் கவலைக்கு உள்ளானதாகவும் இது தொடர்பான அறிக்கைக்காக தாம் காத்திருப்பதாக முகமட் ஷாஷிஹான் தெரிவித்தார்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!