Latestமலேசியா

கோலா குபு பாரு இடைத் தேர்தலில் நான்கு முனைப் போட்டி

கோலாலம்பூர், ஏப் 27 – எதிர்வரும் மே மாதம் 11 ஆம் தேதி நடைபெறவிருக்கும் சிலாங்கூர் கோலா குபு பாரு சட்டமன்ற தொகுதிக்கான இடைத் தேர்தலில் பக்காத்தான் ஹராப்பான், பெரிக்காத்தான் நேசனல், PRM வேட்பாளர்களுடன் ஒரு சுயேச்சை உட்பட நான்கு முனைப் போட்டி ஏற்பட்டுள்ளது.

பக்காத்தான் ஹராப்பான் வேட்பாளராக DAPயின் Pang Sock Tao , பெரிக்காத்தான நேசனலில் சார்பில் Khairul Azhari Saut , Parti Rakyat Malaysia வின் Hafizah Zainuddin , சுயேச்சை வேட்பாளர் Nyau Ke xin ஆகிய நால்வர் இன்று காலை தங்களது வேட்பு மனுக்களை தாக்கல் செய்தனர்.

உலுசிலாங்கூர் மாவட்ட பலநோக்கு மண்டபத்தில் வேட்பு மனுத்தாக்கல் முடிவுற்ற பின் தேர்தல் ஆணையத்தின் அதிகாரி Yuhanas Auree Kamaruddin இதனை அறிவித்தார்.

பக்காத்தான் ஹராப்பான் வேட்பாளரான 31 வயதுடைய Phang வீடமைப்பு மற்றும் ஊராட்சித்துறை அமைச்சர் Ngo Kor Mingகின் பத்திரிகை செயலாளராக இருந்து வருகிறார்.
54 வயதுடைய Kairul உலுசிலாங்கூர் பெர்சத்து இடைக்கால தலைவராக உள்ளார்.
DAP தலைமை செயலாளர் Anthony Loke , தேசிய முன்னணி தலைவர் Ahmad Zahid Hamidi , Amanah தலைவர் Mohamad Sabu. சிலாங்கூர் மந்திரிபெசாரும் ,சிலாங்கூர் பக்காத்தான் ஹராப்பான் தலைவருமான Amiruddin Shah ஆகியோருடன் இன்று காலை மணி 8.43 அளவில் Phang வேட்பு மனுத்தாக்கல் செய்யும் இடத்திற்கு வந்தார்.
அதற்கு முன்னதாகவே பெரிக்காத்தன் நேசனல் வேட்பாளரான Khairulலுடன் பெரிக்காத்தான் நேசனல் தலைவர் டான்ஸ்ரீ முஹிடின் யாசின், பெரிக்காத்தான் கூட்டணியில் உறுப்பு கட்சியான மலேசிய இந்தியர் மக்கள் கட்சி, MIPPயின் தலைவர் P . Punithan, சிலாங்கூர் பாஸ் தலைவர் Abdul Halim Tamuri, கெராக்கான் தலைவர் Dominic Lau ஆகியோரும் உடன் வந்தனர்.

கோலாகுபு பாரு சட்டமன்ற வேட்பாளராக இருந்து DAP யின் Lee Kee Hiong புற்று நோயினால் மார்ச் 21ஆம்தேதி மரணம் அடைந்ததைத் தொடர்ந்து அந்த தொகுதி காலியானது.
இந்த தொகுதியில் 40,226 தகுதிபெற்ற வாக்காளர்கள் உள்ளனர். அவர்களில் 46 விழுக்காட்டினர் மலாய்க்கார வாக்காளர்களாவர். சீன வாக்காளர்கள் 30 விழுக்காட்டையும், இந்திய வாக்காளர்கள் 18 விழுக்காட்டையும் மற்றும் இதர இனத்தவர்கள் 5 விழுக்காட்டையும் கொண்டுள்ளனர்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!