Latestமலேசியா

சபாக் பெர்னாமில் பணியிட விபத்து; மதகு இயந்திரத்தில் சிக்கி 56 வயது பெண் ஊழியர் உயிரிழப்பு

சபாக் பெர்ணாம் ஆகஸ்ட்-16-சிலாங்கூர், சபாக் பெர்ணாமில் நீர்ப்பாசன மற்றும் வடிகால் துறையைச் சேர்ந்த 56 வயது பெண் ஊழியர் ஒருவர், பணியிட விபத்தில் பரிதாபமாக உயிரிழந்தார்.

நேற்று மாலை Grand Sabak Hotel அருகேயுள்ள _roll gate_ எனப்படும் மதகு ஒன்றில் பணியில் ஈடுபட்டிருந்தபோது, அவரது _tudung_ துணி, இயந்திரத்தின் உருளையில் சிக்கியதில் இந்த கோர விபத்து நேர்ந்தது.

சிலாங்கூர் தீயணைப்பு மற்றும் மீட்புத் துறைக்கு பிற்பகல் சுமார் 3.30 மணியளவில் அவசர அழைப்பு வந்தது.

தகவலறிந்த சபாக் பெர்னாம் தீயணைப்பு நிலைய வீரர்கள் உடனடியாக சம்பவ இடம் விரைந்தனர்.

அங்கு மதகின் மீது கிடந்த அந்த மாதுவைப் பரிசோதித்த மருத்துவக் குழுவினர், அவர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதை உறுதிப்படுத்தினர்.

சடலம் மீட்கப்பட்டு, அடுத்தகட்ட விசாரணைக்காகப் போலீஸிடம் ஒப்படைக்கப்பட்டது.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!