Latestமலேசியா

சம்ரி வினோத் மீது ஏன் நடவடிக்கை இல்லை ? இந்திய நாடாளுமன்ற உறுப்பினர்கள் கேள்வி

கோலாலம்பூர், மார்ச்-26 இஸ்லாம் அல்லாத சமயங்களை இழிவுப்படுத்தும் Muhammad Zamri Vinoth Kalimuthu உள்ளிட்ட சமயச் சொற்பொழிவாளர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்குமாறு, மக்களவை மற்றும் மேலவையைச் சேர்ந்த ஒற்றுமை அரசாங்க இந்தியப் பிரதிநிதிகள் உள்துறை அமைச்சை வலியுறுத்தியிருக்கின்றனர்.

3R எனப்படும் இனம்-மதம்-ஆட்சியாளர்கள் குறித்த விவகாரங்களைத் தொடாதீர் என மாமன்னரே அனைவருக்கும் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

அந்த வகையில், சம்ரி வினோத் மீது நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என KDN-னைத் தாங்கள் கேட்டுக் கொள்வதாக ஜெலுத்தோங் நாடாளுமன்ற உறுப்பினர் RSN ராயர் தெரிவித்தார்.

சம்ரி வினோத்தின் டிக் டோக் பக்கத்தில் பதிவேற்றம் செய்யப்பட்ட வீடியோக்களில், மலேசிய இந்துக்கள் வழிபடும் சிவலிங்கம் குறித்து அவராக விளக்கம் தருகிறார்.

வேற்று மதத்தவராக இருந்துக் கொண்டு சிவலிங்கம் குறித்து சம்ரி பேசுவதானது, சிவபெருமானையே இழிவுப்படுத்தும் செயல் என ராயார் சுட்டிக் காட்டினார்.

சம்ரி வெளியிட்டுள்ள கருத்துகள் தொடர்பில் அவரை நீதிமன்றத்தில் குற்றம் சாட்ட வேண்டும் என கேட்டுக் கொள்வதாக நாடாளுமன்றத்தில் இன்று நடத்திய கூட்டுச் செய்தியாளர் சந்திப்பில் ராயர் சொன்னார்.

ராயருடன், கிள்ளான் நாடாளுமன்ற உறுப்பினர் கணபதிராவ், செகாமாட் MP R.யுனேஸ்வரன், பத்து MP பி.பிரபாகரன், செனட்டர் லிங்கேஸ்வரன், ம.இ.கா முன்னாள் உறுப்பினர் செனட்டர் டத்தோ சிவராஜ் சந்திரன் உள்ளிட்டோரும் உடன் இருந்தனர்.

நாடு மற்றும் நாட்டு மக்களின் ஒற்றுமை, அமைதி, வளப்பத்தை உறுதிச் செய்ய, KDN தக்க நடவடிக்கை எடுத்தே ஆக வேண்டும் எனக் கூறிய ராயர், பல்லின மக்கள் வாழும் இந்நாட்டில் எந்த இனமும் சமயமும் யாராலும் இழிவுப்படுத்தப்படக் கூடாது என்பதே தங்களின் கோரிக்கை என்றார்.

சுயேட்சை சொற்பொழிவாளர்கள் எனக் கூறப்படும் குறிப்பிட்ட இரு நபர்கள், அடிக்கடி இஸ்லாம் அல்லாத சமயங்களை விமர்சனம் செய்து வருவதாக இதுவரை 1,008 போலிஸ் புகார்கள் செய்யப்பட்டு விட்டன;

ஆனால், அவற்றின் மீது இது வரை நடவடிக்கை எடுக்கப்படவில்லை என முன்னதாக கணபதிராவும் நாடாளுமன்றத்தில் குரல் எழுப்பியிருந்தார்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!