Latestமலேசியா

சர்ச்சைக்குரிய காலுறை விற்பனைத் தொடர்பில் facebook-கில் இஸ்லாத்தைச் சிறுமைப்படுத்திய சபா ஆடவனுக்கு, 6 மாதச் சிறை

கோத்தா கினாபாலு, மார்ச்-22, ‘அல்லா’ வார்த்தைப் பொறிக்கப்பட்ட காலுறைகள் விற்பனைக்கு வைக்கப்பட்ட சர்ச்சை தொடர்பில் Facebook-கில் இஸ்லாத்தைச் சிறுமைப்படுத்தும் வகையில் கருத்து பதிவேற்றம் செய்த ஆடவருக்கு, சபாவில் 6 மாதங்கள் சிறையும் 15 ஆயிரம் ரிங்கிட் அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது.

இஸ்லாத்துக்கு மதம் மாறியவரான Ricky Shane Cagampang எனும் 33 வயது ஆடவர் குற்றத்தை ஒப்புக் கொண்டதை அடுத்து, கோத்தா கினாபாலு செஷன்ஸ் நீதிமன்றம் அத்தீர்ப்பை வழங்கியது.

அபராதத்தைச் செலுத்த தவறினால் கூடுதலாக 4 மாதங்கள் சிறைத்தண்டனையை அனுபவிக்க வேண்டும் என நீதிபதி உத்தரவிட்டார்.

தான் சாதாரணமாக தான் அக்கருத்தைப் பதிவேற்றியதாகவும், ஆனால் அது இவ்வளவு பெரிய ஆபத்தை ஏற்படுத்தும் அறியவில்லை என்றும் அவன் நீதிமன்றத்தில் தெரிவித்தான்.

பதிவேற்றிய 2-3 நிமிடங்களிலேயே அதனை நீக்கி விட்டதையும் அவன் குறிப்பிட்டான்.

“அது எனது அலட்சியமே. மற்றவர்களின் கருத்துகளால் உணர்ச்சிவசப்பட்டு சற்றும் யோசிக்காமல் அவ்வாறு செய்து விட்டேன். நானே இஸ்லாத்தை ஏற்றுக் கொண்டவன். அப்படியிருக்க இஸ்லாத்தை சிறுமைப்படுத்தும் வகையில் நடந்து கொள்ள மாட்டேன்” எனக் கூறி நீதிமன்றத்திடம் அவன் மன்னிப்பும் கேட்டான்.

இந்த ‘அல்லாஹ்’ காலுறை சர்ச்சையில் 3R எனப்படும் இனம்-மதம்-ஆட்சியாளர்கள் குறித்து பேசுவதைத் தவிர்க்குமாறு மக்களுக்கு அறிவுறுத்தப்பட்டு வரும் நிலையில், அவ்வாடவருக்கு நீதிமன்றம் தண்டனையை வழங்கியுள்ளது.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!