Latestமலேசியா

சவூதி அரேபியாவில் பாதுகாப்பு அச்சுறுத்தல்; உம்ரா பயணத்தைத் தற்காலிகமாக ஒத்திவைக்க மலேசியர்களுக்கு அறிவுறுத்தல்

செப்பாங், அக்டோபர்-13,சவூதி அரேபியாவில் நிலவும் பாதுகாப்பு அச்சுறுத்தல்களைக் கருத்தில் கொண்டு, உம்ரா புனிதப் பயணத்தை மலேசியர்கள் தற்காலிகமாக ஒத்திவைக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

சவூதி தலைநகர் ரியாத்தில் உள்ள மன்னர் காலிட் அனைத்துலக விமான நிலையத்தில் கடந்த சனிக்கிழமை நடத்தப்பட்ட ஏவுகணைத் தாக்குதலைத் தொடர்ந்து, இந்த அறிவுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளது.

புனித மெக்கா நகரில் இதுவரை எந்தவொரு பாதுகாப்புச் சம்பவமும் பதிவாகவில்லை என்றாலும், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மெக்கா மற்றும் மடினாவுக்கான அவசியமற்ற பயணங்களை ஒத்திவைக்குமாறு வெளியுறவு அமைச்சர் டத்தோ ஸ்ரீ முஹமட் ஹசான் கேட்டுக் கொண்டார்.

இதனிடையே, ரியாத் விமான நிலையத்தில் நடத்தப்பட்ட தாக்குதலில் 12 பேர் உயிரிழந்ததுடன், 309 பேர் காயமடைந்ததாக சவூதி அரேபியாவின் பொது விமானப் போக்குவரத்து ஆணையம் தெரிவித்துள்ளது.

உயிரிழந்தவர்களில் சவூதி அரேபியா, வங்காளதேசம் உள்ளிட்ட பல்வேறு நாடுகளைச் சேர்ந்தவர்கள் அடங்குவர்.

ரியாத் மற்றும் தம்மாம் விமான நிலையங்கள் தொடர்பான சம்பவங்களில் மலேசியர்கள் யாரும் உயிரிழக்கவோ காயமடையவோ இல்லை என விஸ்மா புத்ரா உறுதிப்படுத்தியுள்ளது.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!