Latestமலேசியா

சாங்கி விமான நிலையத்தில் இனி தானியங்கி clearance பாதையைப் பயன்படுத்த வெளிநாட்டிருக்கு வாய்ப்பு

கோலாலம்பூர், மே-18 – சிங்கப்பூர் வந்திறங்கும் மலேசியர்கள் இப்போது Changi விமான நிலையத்தில் குடிநுழைவுத் துறையின் தானியங்கி அனுமதி பாதைகளைப் பயன்படுத்தலாம்.

சிங்கப்பூருக்கு வரும் அனைத்து வெளிநாட்டுப் பயணிகளும், அவர்கள் எந்த நாட்டைச் சேர்ந்தவர்கள் என்பதைப் பொருட்படுத்தாமல், குடிநுழைவு அனுமதிக்காக அந்தத் தானியங்கி clearance பாதைகளைப் பயன்படுத்தலாம் என Changi விமான நிலையம் தனது facebook பக்கத்தில் அறிவித்திருக்கிறது.

சிங்கப்பூருக்கு வருவதற்கு முன் பதிவு தேவையில்லை.

இது பயணிகளுக்கு ஒரு வசதியான மற்றும் அலைக்கழிப்பு இல்லாத அனுபவத்தைக் கொடுக்கும் என அவ்வறிக்கைத் தெரிவிக்கிறது.

2023 ஆம் ஆண்டில், Changi விமான நிலையம், உலகின் மிகவும் பரபரப்பான விமான நிலையங்களின் தர வரிசையில் ஐந்தாவது இடத்தைப் பிடித்தது குறிப்பிடத்தக்கது.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!